Ad

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

தஞ்சாவூர் : உதயநிதி ஸ்டாலின் வருகையால் உற்சாமடைந்த எம்.எல்.ஏ; ஏமாற்றமடைந்த தொண்டர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன். இவர் திமுகவில் தஞ்சை மத்திய மாவட்டப் பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகிறார். சந்திரசேகரனின் அம்மா துளசியம்மாள் சமீபத்தில் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.

படத்திறப்பு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின்

இதனைத் தொடர்ந்து துளசியம்மாள் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு சந்திரசேகரன் ஏற்பாடு செய்தார். அதன்படி இன்று நடைபெற்ற படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாநில இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவே தஞ்சாவூர் வந்தார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக தஞ்சாவூர் வருவதால் உதயநிதியின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இளைஞரணி நிர்வாகிகள் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் சங்கம் ஹோட்டலில் தங்கினார். இதையடுத்து திருவையாறு அருகே உள்ள சந்திரசேகரனின் சொந்த ஊரான கண்டியூரில் இன்று காலை நடைபெற்ற படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்காக சந்திரசேகரன் குடும்பத்தினர் பெரிய அளவிலான மேடை அமைத்திருந்தனர்.

Also Read: `களைகட்டாத சசிகலா பிறந்தநாள் முதல் பொன்னாரை புறக்கணிக்கும் மாவட்ட நிர்வாகிகள் வரை' கழுகார் அப்டேட்ஸ்

உதயநிதி ஸ்டாலின்

மேலும் சந்திரசேகரனின் உறவினர்கள் மற்றும் திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கட்சித் தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் வருகிறார் என்பதை அறிந்து சுமார் ஆயிரம் பேர் வரை திரண்டிருந்தனர். சுமார் 10 மணியளவில் வந்த உதயநிதி ஸ்டாலின் மேடைக்குச் சென்று படத்தைத் திறந்து வைத்தார். இதையடுத்து சந்திரசேகரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன், "சந்திரசேகரின் கட்சிப் பணிகள் குறித்து அனைவரும் அறிவீர்கள் அவர் தாயாரின் ஆசி அனைவருக்கும் எப்போதும் இருக்கும்" என ரத்தின சுருக்கமாக பேசி முடித்தார். இதையடுத்து கார் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.

உதயநிதி ஸ்டாலின் அரசியல் பேசுவார் என எதிர்பார்த்து வந்த இளைஞரணியைச் சேர்ந்த தொண்டர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இதுகுறித்து விவரமறிந்த லோக்கல் திமுக -வைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், "சந்திரசேகரன் கட்சியில் சீனியர். விசுவாசமாகவும் இருக்கக் கூடியவர். அவரின் செயலுக்காகவே உதயநிதி தானாக முன்வந்து படத்தை திறக்க வந்தார். இதன் மூலம் சந்திரசேகரன் மீது முதலமைச்சர் ஸ்டாலினும், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினும் வைத்திருக்கும் நன் மதிப்பை அறிய முடிகிறது.

எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன்

உதயநிதி ஸ்டாலின் வருகிறேன் என அனுமதி கொடுத்ததுமே பெரிய அளவிலான மேடை அமைத்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் படத்தை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின் அரசியல் பேசவில்லை என்றாலும் பரவாயில்லை எம்.எல்.ஏ சந்திரசேகரன் குறித்து கூடுதலாக நாலு வார்த்தை பேசியிருக்கலாம். மொத்தத்தில் பத்து நிமிடம் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இது சந்திரசேகரன் தரப்பு ஆதரவாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஏமாற்றத்தைத் தந்தது.

கார் டிராவல்ன்னா உதயநிதி ஸ்டாலினுக்கு ரொம்பப் பிடிக்கும் அவரும் காரில் செல்லும் மூடில்தான் இருந்தார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் சீக்கிரம் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை வீட்டு வந்து விட வேண்டும் என உதயநிதி ஸ்டாலினிடம் கூறியதாகச் சொல்கிறார்கள். அதனால்தான் அவசர அவசரமாக நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கிளம்பி விட்டார் என்கின்றனர். உதயநிதி வந்ததே எங்களுக்கு போதும் என சந்திரசேகரன் தரப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்" என்றார்

`மெட்ராஸ் டே' Quiz

`மெட்ராஸ் டே' Quiz

நீங்க தஞ்சாவூரா இருக்கலாம், வந்தவாசியா இருக்கலாம், மதுரையா இருக்கலாம். இல்ல... கன்னியாகுமரியாகூட இருக்கலாம். ஆனா, நம்ம எல்லாருடைய லைஃப்லயும் சென்னை கலந்திருக்கும். நாம சென்னையைக் கடந்திருப்போம். அப்படி நம்ம லைஃபோட கலந்திருக்குற சென்னையைப் பத்தி நமக்கு எவ்வளவு தெரியும்? இந்த quiz -ஐ attend பண்ணுங்க!

கலந்துகொள்ள க்ளிக் செய்க - https://bit.ly/3gl7qMl



source https://www.vikatan.com/news/politics/udhayanithi-stalin-attend-the-mla-s-family-function-at-tanjore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக