Ad

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

`ரெளடிகளுடன் தொடர்பு கிடையாது; இனி ஆன்மீக பயணம்!' - ஜாமீனில் வந்த தேஜஸ் சுவாமிகள் அதிரடி

"இனிமேல் எந்த ரெளடிகளிடமும் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன். மீண்டும் நான் ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளப் போகிறேன். இதில் யார் மனதும் புண்பட்டிருந்தால் என்ன மன்னித்துவிடுங்கள்" என்று தேஜஸ் சுவாமிகள் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தேஜஸ் சுவாமி

யார் இந்த தேஜஸ் சுவாமிகள்?

திருச்சி மாவட்டம், அல்லித்துறையை அடுத்த கன்னியம்மன் கோயில் அருகில் வசித்துவருபவர் பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிகள். அவர், தன்னைத் தானே சாமியார் எனச் சொல்லிக்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த மாதம் ஒரு வழக்கறிஞரிடம் போனில் பேசும் போது, ``தமிழகத்தில் 42 ரெளடிகள் கொண்ட லிஸ்ட்டை போலீஸார் கையில் எடுத்திருக்கிறார்கள். அதில், டெல்டா மாவட்டங்களில் மட்டும் 12 ரெளடிகள் என்கவுன்ட்டர் லிஸ்ட்டில் இருக்கிறார்கள்.

கோவில்

எப்போது வேண்டுமானாலும் என்கவுன்ட்டர் நடக்கலாம். திருச்சியைச் சேர்ந்த முக்கிய ரெளடிகள் சிலர், என்னை வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். பிரபல ரெளடிகள் என்னிடம் தொடர்பில் இருக்கிறார்கள்" என்றெல்லாம் அந்த ஆடியோவில் பேசியிருந்தார் தேஜஸ் சுவாமிகள். அந்த ஆடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவில்

இந்நிலையில், திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் திருச்சியைக் கதிகலக்கிவரும் பிரபல ரெளடியான கொட்டப்பட்டு ஜெய், "தனக்கு எதிராக நீதிமன்றம் சென்று சாட்சி சொன்னால் கொன்றுவிடுவேன்" என்று மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

புகாரின் பெயரில் ஜெய்யை கைது செய்து விசாரித்த போலீஸார், காவல்துறையினர், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், எல்லா உயர் அதிகாரிகளையும் அல்லித்துறை தேஜஸ் சுவாமிகள், வழக்கறிஞர் கார்த்திக்குத் தெரியும் என்றும் ஜெய் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்திருந்தார். அதன் பெயரில் போலீஸார் தேஜஸ் சுவாமிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேஜஸ் சுவாமிகள்

தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகப் பொன்மலை காவல்நிலைய வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 60 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரெளடி கொட்டப்பட்டு ஜெய், அவரது வழக்கறிஞர் கார்த்திக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட கொட்டப்பட்டு ஜெய் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருச்சி தேஜஸ் சுவாமிகள்

இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த தேஜஸ் சுவாமிகள், ``இனிமேல் எந்த ரெளடிகளிடமும், தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன், மீண்டும் ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளப் போகிறேன். காவல்துறையினர், அரசு மற்றும் பொது மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்” என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

Also Read: `என்கவுன்டர் லிஸ்ட்டில் 42 ரெளடிகள்; அரசியல் தொடர்பு'-திருச்சி தேஜஸ் சுவாமி கைதுப் பின்னணி!



source https://www.vikatan.com/news/crime/samiyar-tejas-swami-action-statement-after-getting-bail

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக