Ad

சனி, 21 ஆகஸ்ட், 2021

`தமிழகத்தில் மேலும் 4 நாள்களுக்கு கனமழை நீடிக்கும்!' - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் பல இடங்களில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் பரவலாகக் கனமழை பெய்துவருகிறது.

சாலைகளில் வெள்ளம்

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரையில், கோயம்பேடு, கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், ஆழ்வார்பேட்டை, தி.நகர், புழல், கே.கே.நகர், கொளத்தூர், அண்ணாநகர், விருகம்பாக்கம், கிண்டி, ஆவடி, பெரம்பூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இது தவிர, கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் தென் மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

Also Read: மழை பெய்தாலே அஞ்ச வேண்டுமா... சென்னை மழை சொல்லும் செய்தி என்ன?

வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம், 'தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 18 மாவட்டங்களில், மேலும் 4 நாள்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/tamilnadu/heavy-rain-will-continue-for-four-more-days-in-tamil-nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக