இந்தியாவின் ப்ளேயிங் லெவன் : மன்ப்ரீத் சிங் (கேப்டன்), ஸ்ரீஜிஷ் (கோல் கீப்பர்), அமித் ரோஹிதாஸ், ரூபிந்தர் பால் சிங், ஹர்மன்ப்ரீத் சிங், சுரேந்தர் குமார், ஹர்திக் சிங், நிலகந்த ஷர்மா, ஷம்ஷெர் சிங், மந்தீப் சிங், தில்ப்ரீத் சிங்
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவிடம் 7-1 என மோசமாகத் தோற்றாலும் மற்ற போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்றிருக்கிறது இந்தியா. நியூசிலாந்தை 3-2, ஸ்பெயினை 3-0, அர்ஜென்டினாவை 3-1, ஜப்பானை 5-3 எனத் தோற்கடித்து வெற்றிபெற்றிருக்கிறது இந்தியா. காலிறுதிப் போட்டியில் பிரிட்டனையும் 3-1 என தோற்கடித்தது.
2018-ல் நடைபெற்ற ஹாக்கி உலகக்கோப்பையை வென்ற அணி பெல்ஜியம். 2016 ரியோ ஒலிம்பிக்கில் காலிறுதிப்போட்டியில் இந்தியாவையும் தோற்கடித்திருக்கிறது. ஆனால், இந்தியா தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் இன்றையப் போட்டி இரு அணிகளுக்கும் இடையே கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
source https://sports.vikatan.com/olympics/will-india-beat-belgium-in-tokyo-olympics-hockey-semifinals
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக