``அனைத்து சாதியினரும் அர்ச்சகர் விவகாரத்தில் ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவறை செய்ததால் நான் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டி நிலைவந்துள்ளது” என்று ட்வீட் மூலம் தி.மு.கவுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளார் பாஜக வின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி.
“பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்” என்று தி.மு.கவினால் நீண்ட காலமாக சொல்லப்பட்டு வந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற திட்டத்திற்கு ஸ்டாலின் அரசு உயிர் கொடுத்துள்ளது. பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு அர்ச்சகர் பணி ஆணையை சமீபத்தில் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இந்த பணி ஆணைகளை பெற்றவர்களும், ஆலயங்களில் பணி செய்ய துவங்கிவட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக சமூக வளைத்தளங்களில் இதற்கு எதிரான கருத்துகள் பரவிவருவதாக சட்டமன்றத்திலும் பிரச்னை வெடித்தது.
இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “கலைஞர் ஆட்சிக்காலத்திலேயே இந்த சட்டம் கொண்டுவந்தாலும், தற்போதுதான் அதை நாம் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளோம். அதற்கான பணி ஆணைகளையும் நாம் வழங்கியுள்ளோம். ஆனால் இதை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்று திட்டமிட்டு சிலர் சில காரியங்களைச் செய்துவருகிறார்கள். சமூக நீதியை பாழடிக்க வேண்டும்மென்ற நோக்கத்தில் சிலர் திட்டமிட்டு இந்த காரியங்களை செய்துவருகிறார்கள்” என்று பதில் அளித்தார்.அரசின் மூலம் பணிநியமனம் பெற்ற அர்ச்சகர்களால்,ஏற்கனவே கோலில் அர்ச்சகர் பணியில் இருந்தவர்களின் பணி வாய்ப்பு பறிபோனதாக எழுந்த குற்றசாட்டை தொடர்ந்தே சட்டமன்றத்தில் இந்த பதிலுரயை ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிலையில் இந்த விவகாத்தை கையில் எடுத்துள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதாகவம் அறிவித்துள்ளார். கடந்த தி.மு.க ஆட்சியின் போது சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் வசம் இருந்து அரசாங்கமே ஏற்றுநடத்தும் என்று அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்தார். அதை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் நீதிமன்றத்திற்கு சென்றார்கள். உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் சென்றவர் சுவாமி. இறுதியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தீட்சிதர்கள் வசமே நடராஜர் ஆலயம் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நீதிமன்ற தீர்ப்பைச்சுட்டிக்காட்டியுள்ள சுவாமி. “உங்கள் அப்பா செய்த தவறை நீங்களும் செய்துவிட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணிக்கான ஆணையை தமிழக அரசு வழங்கியதும், ஏற்கனவே அந்த பணியில் இருந்தவர்கள் சார்பல் சுவாமியிடம் இந்த விவகாரத்தை கொண்டு சென்றுள்ளார்கள. அரசு அறிவித்த அறிவிப்பினால், பலர் பாதிக்கபட்டுள்ளதாக அவரிடம் சொல்லியிரு்க்கிறா்ர்கள்.
இதன்பின் சுவாமிக்கு நெருக்கமானவர்கள் இது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இந்த ஆலோசனையின் முடிவில், சென்னை நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்ய முடிவாகியுள்ளது. வரும் 26-ம் தேதி சென்னை வரும் சுவாமி, இந்த திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளாராம். இதனால் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய சர்ச்கைள் கிளம்பும் என்று தெரிகிறது!
source https://www.vikatan.com/government-and-politics/politics/stalin-vs-swamy-will-the-temple-priest-issue-will-spark-upcoming-days
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக