Ad

புதன், 25 ஆகஸ்ட், 2021

`வீட்டிலிருந்தே அமேஸானில் வேலை!’ - மோசடி கும்பலிடம் ரூ.2.33 லட்சம் பணத்தை இழந்த பெண்

கொரோனா பொது முடக்கத்தால் வீட்டில் இருந்து வேலை செய்வது அதிகரித்துள்ளது. வேலையை இழந்த லட்சக்கணக்கானோர் வீட்டில் இருந்து செய்யக்கூடிய வேலை எதாவது கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களை ஆன்லைன் மோசடி கும்பல் குறிவைத்து தங்களது கைவரிசையை காட்டி வருகிறது.

அந்தவகையில் மும்பை போரிவலி பகுதியை சேர்ந்த 37 வயது குடும்ப பெண் சகுந்தலாவின் மொபைல் போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் வீட்டில் இருந்தே அமேஸானில் வேலை செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆன்லைன் மோசடி

உடனே அதில் குறிப்பிட்டு இருந்த போன் நம்பருக்கு போன் செய்து தான் அமேஸானில் வேலை செய்ய விரும்புவதாக சகுந்தலா தெரிவித்தார். போனில் பேசிய நபர் அமேஸானில் அதிக பொருட்கள் வாங்க எங்களுக்கு உதவி செய்தால் அதற்கு கமிஷன் கிடைக்கும் என்று தெரிவித்தார். இதற்காக ஒரு குறிப்பிட்ட மொபைல் இ-வேலட்டிற்கு பணம் அனுப்பி வைக்கவேண்டும் என்று அந்த நபர் தெரிவித்தார்.

உடனே அப்பெண் அந்த நபர் தெரிவித்த இ-வேலட்டிற்கு முதல் கட்டமாக ரூ.5 ஆயிரம் அனுப்பிவைத்தார். உடனே அந்த பணத்திற்கு ரூ.200 கமிஷனையும், அவர் அனுப்பிய ரூ.5 ஆயிரத்தையும் குடும்ப பெண் வங்கிக்கணக்கிற்கு போனில் பேசிய நபர் அனுப்பி வைத்தார். அதன் பிறகு தனது சீனியர் மேற்கொண்டு டெலகிராம் மூலம் தொடர்பு கொள்வார் என்று தெரிவித்தார். அவர் சொன்னபடி வேறு ஒரு நபர் டெலிகிராம் மூலம் குடும்ப பெண்ணை தொடர்பு கொண்டார் பேசினார். பல்வேறு புதிய இ-வேலட்களில் பணத்தை முதலீடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

Also Read: ₹720 கோடி பண மோசடி; கார்வி நிறுவனத்தின் சேர்மன் பார்த்தசாரதி கைது; என்ன நடந்தது?

ரூ.4.04 லட்சம் கிடைக்கும் என்ற ஆசையில் 2.33 லட்சத்தை அவர்கள் சொன்ன இ-வேலட் மூலம் அப்பெண் அனுப்பி வைத்தார். ஆனால் சொன்னபடி ரூ.4.01 லட்சம் பணம் கிடைக்கவில்லை. இதனால் அப்பெண், மோசடி நபரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வருமான வரியாக ரூ.80,700 செலுத்தும்படி அந்த நபர் தெரிவித்திருக்கிறார். அதனால் அப்பெண் தனது பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் பணத்தை திரும்ப கொடுக மறுத்த நபர் வருமான வரியை செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். இதனால் தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்த அப்பெண் இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்



source https://www.vikatan.com/news/crime/a-gang-cheated-women-by-saying-work-from-home-opportunity-in-amazon

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக