Ad

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

வங்கி டெபாசிட்டில் உங்கள் பணம் தூங்குகிறதா? இவற்றை ஏன் முயற்சி செய்து பார்க்கக்கூடாது? - 10

வங்கி சேவிங்ஸ் அக்கவுன்ட்கள் தரும் வசதிகளைப் பார்த்தோம்.

வங்கி என்பது வெறும் சேவிங்ஸ் அக்கவுன்ட் மட்டுமல்ல;

- ரெக்கரிங் டெபாசிட்,

- ஃபிக்சட் டெபாசிட்,

- 5 வருட வரி சேமிப்புத் திட்டம்,

- சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டம்,

- சுகன்யா சம்ரித்தி திட்டம் போன்ற டெபாசிட் திட்டங்களையும்,

- வாகனக் கடன்,

- வீட்டுக் கடன், கல்விக் கடன், ந

- கைக் கடன்,

- தனி நபர் கடன்,

- வேளாண்மைக் கடன்,

- வியாபாரக் கடன்,

- கரன்ட் அக்கவுன்ட் போன்ற கடன் திட்டங்களையும் உள்ளடக்கிய அட்சய பாத்திரம். வள்ளுவர் இன்றிருந்தால், ``பர்சனல் ஃபைனான்ஸ் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் பேங்க் வழி சேராதார்” என்று புதுக்குறளே எழுதி இருப்பார்.

வங்கிகள்

Also Read: ₹100-க்கே ₹2 லட்சம் இன்ஷூரன்ஸ் கவரேஜ்; வங்கிகளில் கிடைக்கும் இந்த சேவைகள் பற்றி தெரியுமா? - 9

1990-கள் வரை 13 சதவிகிதமும், அதற்கு அதிகமாகவும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் வட்டி கிடைத்தது. ஆகவே, பல சீனியர் சிட்டிசன்களும் பென்ஷன் இல்லை என்ற கவலை இல்லாமல், ஓய்வுக்காலத்தில் வந்த மொத்தப் பணத்தையும் வங்கி டெபாசிட்டுகளில் போட்டு வட்டி வருமானத்தில் சந்தோஷமாகக் காலத்தை ஓட்டினர்.

தற்போது 5.50% - 7% வரையே வட்டி தரப்படுகிறது. ஆகவே, முக்கியமான முதலீட்டு முறையாக இருந்த வங்கிகள் தற்போது ஜம்பிங் போர்டாக (பல சாதனைகளுக்கு அடித்தளம் என்று அர்த்தம்!) மாறிவிட்டன. நமது குறுகிய கால மற்றும் நீண்ட கால வளர்ச்சித் திட்டங்களுக்கான ஜம்பிங் போர்டு இது. முதல் போடாமல் எந்தத் தொழிலையும் ஆரம்பிக்க முடியாது. அந்த முதலைச் சேர்க்கும் வழி இது. வீடு, வாகனம் போன்றவற்றுக்கு கடன் பெற்றாலும் பத்து பர்சன்டாவது டவுன் பேமென்ட் தர வேண்டியிருக்கும். அதைச் சேர்ப்பதற்கும் வங்கிதான் வழி.

வங்கி தரும் முக்கியமான சேமிப்பு வழிகள் ரெக்கரிங் டெபாசிட் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட். மாதம்தோறும் சிறுகச் சிறுக சேர்த்து, மொத்தத் தொகை பெறும் வழி ரெக்கரிங் டெபாசிட். வருடாந்தரச் செலவுகளான ஸ்கூல் ஃபீஸ், தீபாவளி, பொங்கல் செலவுகள், சுற்றுலா, துணி மணி செலவுகள் போன்ற மொத்தச் செலவுகளுக்கு தனித்தனியாக ஆர்.டி ஆரம்பித்து சேர்த்து வந்தால், செலவு வரும் நேரம் திகைக்க வேண்டியிருக்காது.

டெபாசிட்

Also Read: பணத்தை சேமித்தால் மட்டும் போதாது மக்களே; இதுவும் செய்ய தெரியணும்! - பணம் பண்ணலாம் வாங்க - 8

பிக் டிக்கெட் ஐட்டம்ஸ் என்று அழைக்கப்படும் மேற்படிப்பு, திருமணம், வாகனம் வாங்குதல், வீடு வாங்குதல் போன்ற பெரிய செலவுகளுக்கு சேமித்து வர ஃபிக்ஸட் டெபாசிட் உதவும். பெரிய தொகையை டெபாசிட் செய்து மாதாந்தர வட்டி பெறுதல் அல்லது வட்டியை எடுக்காமல், குட்டி போட வைத்து பெரிய தொகையை இன்னும் பெரிய தொகையாக்குதல் என்ற இரு விதமான வழிகள் கொண்டது ஃபிக்ஸட் டெபாசிட். ஏழு நாள்கள் முதல் பத்து வருடங்கள் வரை ஃபிக்ஸட் டெபாசிட்டுகளை ஆரம்பிக்கலாம்.

ஐந்து வருட வரி சேமிப்புத் திட்டத்தில் ஆரம்பிக்கப்படும் எஃப்.டி-க்கு செக்ஷன் 80-சியின் கீழ் வரிவிலக்கு கிட்டும். மேற்கண்ட டெபாசிட்டுகளிலிருந்து கிடைக்கும் வட்டி ரூ. 40,000-த்தைத் தாண்டினால் (சீனியர் சிட்டிசன்களுக்கு ரூ.50,000) 10% வருமான வரி பிடிக்கப்படும். வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லாதவர்கள் படிவம் 15 ஜி/ஹெச் சமர்ப்பித்து வரிப் பிடித்தத்தைத் தவிர்க்கலாம். வங்கிகளில் வைக்கப்படும் டெபாசிட்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரை அரசின் உத்தரவாதம் உள்ளது.

உங்களிடம் ரூ.50,000-க்கு ஃபிக்ஸட் டெபாசிட் இருந்தால் அதன் மீது ரூ.37,500 வரை லிமிட் கொண்ட கரன்ட் அக்கவுன்ட்டைக் கேட்டுப் பெறலாம். கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் இவற்றில் சிக்கி 18%, 36% என்று வட்டி கட்டுபவர்களுக்கு வெறும் 7% வட்டி என்பது வரப்பிரசாதம் அல்லவா? அவசரமாக ரூ.10,000 தேவை எனில், இந்த கரன்ட் அக்கவுன்ட்டிலிருந்து செக் அல்லது ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம்; மறுநாளேகூட திரும்பக் கட்டலாம்; மறுபடி எடுக்கலாம். ஃபிக்ஸட் டெபாசிட்டுகளிலுள்ள இந்த வசதியை நிறைய பேர் அறிவதில்லை.

Bank

Also Read: அவசர கால நிதி: உங்கள் நிம்மதிக்கு கியாரண்டி தரும் சூப்பர் ஃபார்முலா! - பணம் பண்ணலாம் வாங்க - 7

கடன் என்றதுமே நமக்கு உடனே நினைவுக்கு வருவதும் வங்கிகள்தான். கந்து வட்டிக்காரர்கள் கையில் சிக்கி சின்னாபின்னமடைந்த சாதாரண மக்களுக்கு ஆபத்பாந்தவனாக வந்தவை பொதுத்துறை வங்கிகள். இன்று தனியார் வங்கிகள், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள், என்.பி.எஃப்.சி என்று எத்தனை வந்தாலும், கடன்களுக்கு பொதுத்துறை வங்கிகள் விதிக்கும் கட்டணங்களும், வட்டி விகிதமுமே குறைவாக உள்ளது.

இன்று பலதரப்பட்ட வங்கிகள் நடைமுறையில் உள்ளன. வங்கியில் எந்த அக்கவுன்ட் ஆரம்பிக்க விரும்பினாலும், அதன் பாரம்பரியம், கட்டணங்கள், விதிமுறைகள், வட்டி விகிதங்கள் போன்ற அனைத்தையும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்தல் நலம்.

(மீண்டும் வெள்ளிக்கிழமை சந்திப்போம்).



source https://www.vikatan.com/business/finance/an-introduction-to-best-investment-options-in-banks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக