புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்!
தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை, தொடர்ந்து அதிகரித்து வந்தபோது ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. மே மாதம் 24-ந்தேதி அமைபடுத்தப்பட்ட முழு ஊரடங்குக்கு பின்னர் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. அதன் பின்னர் படிபடியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தொற்று பாதிப்பு குறைவான மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என வகை வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன,
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் புதிய தளர்வுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. 12 -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில், இ பாஸ், இ பதிவு முறை ரத்து செய்யப்பட்டது. ஹோட்டல்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், பொது பஸ் போக்குவரத்து, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
Also Read: தமிழ்நாடு ஊரடங்கு: `டாஸ்மாக் முதல் போக்குவரத்து வரை!' - கூடுதல் தளர்வுகள் என்னென்ன?
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-05-07-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக