Ad

திங்கள், 26 ஜூலை, 2021

Tamil News Today: இந்தியாவில் 4 லட்சத்திக்கும் கீழ் குறைந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை! - கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 29,689 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 415. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,21,382-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,06,21,469 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 3,98,100 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 42,363 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 44,19,12,395 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

உள்ளாட்சி தேர்தல் - ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பால். 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் செப்டம்பர் மாதம் 15 -ம் தேதிக்குள் இந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாகவும், வரும் டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது!



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-27-07-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக