Ad

திங்கள், 26 ஜூலை, 2021

கோவை: `ஹலோ, காவல்கட்டுப்பாட்டு அறையா?' - போலீஸை அடிக்கடி பதறவைக்கும் வெடிகுண்டு மிரட்டல் குடிமகன்

கோவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பீர்முகமது (37). இவர் சென்னை மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து, ‘மெரினா கடற்கரையில் குண்டு வெடிக்கும்’ என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, போலீஸார் மெரினா கடற்கரையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.

வெடிகுண்டு மிரட்டல்

Also Read: திருச்சி: மணல் கடத்தல்; போலீஸுக்கு மிரட்டல்! - திமுக ஒன்றியப் பொறுப்பாளர் கட்சியிலிருந்து நீக்கம்

இதனிடையே, பீர்முகமது தொடர்ச்சியாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து, ‘மெரினா கடற்கரையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் வெடிக்கும்’ என்று கூறியுள்ளார்.

செல்போன் எண்ணை கொண்டு போலீஸார் அவரது இருப்பிடத்தை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து, அவரது விபரங்களை கோவை மாநகர போலீஸாருக்கு அனுப்பி வைத்தனர். கோவை போலீஸார், பீர் முகமதுவை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், பீர்முகமது ஏற்கெனவே பலமுறை வெடிகுண்டு மிரட்டல் வழக்குகளில் கைது செய்யப்பட்டது தெரியவந்தது.

கோவை

பீர் முகமது கோவை அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதாகியுள்ளார். குனியமுத்தூர் பகுதியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்து கைதாகியுள்ளார்.

Also Read: சென்னை: கஞ்சா பொட்டலங்களுடன் இருந்த நாட்டு வெடிகுண்டு! - ஆந்திராவில் நடந்தது என்ன?

2018-ம் ஆண்டு உக்கடம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக பீர் முகமது கைது செய்யப்பட்டிருந்தார். 2017- ம் ஆண்டு கோவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

பீர்முகமது

குடிபோதையில் அவ்வப்போது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை பீர் முகமது வாடிக்கையாக வைத்துள்ளார். இதையடுத்து, கோவை வந்த சென்னை போலீஸார் விசாரணைக்காக பீர்முகமதுவை அழைத்து சென்றனர்.



source https://www.vikatan.com/news/crime/coimbatore-man-arrested-for-threatening-police-over-call

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக