Ad

திங்கள், 26 ஜூலை, 2021

வரலாறுகளின் உறைவிடம் - மதுரை அமெரிக்கன் கல்லூரியின் வரலாறு குறித்த கட்டணமில்லா கருத்தரங்கு!

ஆனந்த விகடன் மற்றும் மதுரை 'தி அமெரிக்கன் கல்லூரி' இணைந்து 'வரலாறுக‌ளின் உறைவிடம்' என்கிற நிகழ்ச்சியை வருகிற ஜூலை 30ம் தேதி வெள்ளிக் கிழமை நடத்த இருக்கிறது. ஆன்லைன் வழி நடக்கும் கட்டணமில்லா கருத்தரங்கு இது.

மதுரையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று பழைமையும் பெருமையும் வாய்ந்த 'தி அமெரிக்கன் கல்லூரி'. 1881ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி அந்தக் காலத்தில் தென் தமிழகத்தில் இருந்த ஒரே கல்லூரி. தொடக்க காலங்களில் அமெரிக்கப் பேராசிரியர்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகே முதல்வர், பேராசிரியர்கள் என படிப்படியாக அனைத்து மட்டங்களிலும் இந்தியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி இன்னும் நிறையப் பெருமைகள். எல்லாவற்றையும் பேசுகிறது நிகழ்வு.

அமெரிக்கன் கல்லூரி பிரதான கட்டடம்

திரைப்பட இயக்குநரும் கல்லூரியின் முன்னாள் மாணவருமான கரு.பழனியப்பன் மற்றும் கல்லூரியின் முதல்வரும் செயலருமான‌ எம்.தவமணி கிற்ஸ்டோபர் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

ஆனந்த விகடன் மற்றும் தி அமெரிக்கன் காலேஜ், மதுரை இணைந்து வழங்கும் 'வரலாறுகளின் உறைவிடம் - 'தி அமெரிக்கன் காலேஜ்' என்ற இந்த ஆன்லைன் நிகழ்ச்சி, ஜூலை 30, மாலை 6.30 - 8.00 மணி வரை நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம்! ஆனால், முன்பதிவு அவசியம்.

பதிவு செய்ய: https://bit.ly/3iC5wal



source https://www.vikatan.com/events/announcements/know-about-the-history-of-madurai-american-college-in-this-online-conference

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக