Ad

ஞாயிறு, 18 ஜூலை, 2021

Tamil News Today: `இந்தியாவில் ஒரே நாளில் 38,164 பேருக்கு பாதிப்பு; 499 மரணங்கள்!’ - கொரோனா நிலவரம்

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 38,164 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,11,44,229 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 499. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,14,108-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சிகிச்சைப் பிரிவு

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,03,08,456-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,21,665 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 38,660 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 40,64,81,493 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, 3 அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகாா் தொடா்பாக பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எதிா்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளது. தமிழ்க எம்.பிகள் இரு அவையிலும் கர்நாடகா மேக்கேதாட்டு-வில் அணை கட்டுவது தொடர்பான பிரச்னையை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றம்

இதனிடையே இந்த மழைக்கால கூட்டத் தொடரில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-19-07-2021-just-now-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக