நான் 20 வருடங்களாக inderal 40 மாத்திரை எடுத்து வருகிறேன். நான் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? தடுப்பூசி போடும்போது மாத்திரையைத் தவிர்க்க வேண்டுமா?
- உசேன் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பூங்குழலி.
``நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மருந்து, ரத்த அழுத்தம் அல்லது இதய நோய்களுக்காகக் கொடுக்கப்படுவது.
பொதுவாக, தடுப்பூசியின் திறனை பாதிப்பவை என்றால், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகள் மட்டும்தான். நீங்கள் எடுத்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள மாத்திரை, நோய் எதிர்ப்பாற்றலைத் தடுக்கக்கூடியதல்ல. இந்தச் சிகிச்சையில் இருப்போர் இணை நோயாளிகள் பிரிவில் வருகிறார்கள். இணை நோய்கள் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போட வலியுறுத்தப்படும் பட்சத்தில், நீங்களும் அதைப் பின்பற்ற வேண்டும்.
Also Read: Covid Questions: கோவிட் தொற்றுக்குப் பின் முடி அதிகமாக கொட்டுகிறது; அதற்கும் இதற்கும் தொடர்புண்டா?
இந்த மாத்திரையை எடுப்பதால் தடுப்பூசியைத் தவிர்ப்பதோ, தடுப்பூசிக்காக மாத்திரையை நிறுத்துவதோ தேவையில்லை."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/can-people-who-take-inderal-40mg-tablet-take-covid-vaccine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக