Ad

திங்கள், 26 ஜூலை, 2021

திருச்சி: `உங்க போனுக்கு ஓடிபி வந்திருக்கா சார்.. அதை உடனே சொல்லுங்க!’ -பணத்தை பறிகொடுத்த ஐடி ஊழியர்

`உங்க நம்பருக்கு ஒரு ஓ.டி.பி வந்திருக்கா சார். உடனே டைம் அவுட் ஆவுறதுக்குள்ள அந்த நம்பரைக் கொஞ்சம் சொல்லுங்க. அஞ்சு நிமிஷத்துல உங்க பிரச்னையை சரிபண்ணுகிறோம்’ என்று சொல்லி ஐ.டி கம்பேனியில் வேலைபார்ப்பவரிடம் நூதனமான முறையில் மோசடி செய்திருக்கும் சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

திருச்சி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்தவர் மோகன். இவர் பெங்களூருவில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவர் கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த ஒருவருடமாக வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் இவரது ஸ்மார்ட்போனில் உள்ள ’போன் பே’ ஆப் மூலமாக அவரது சேலரி அக்கவுண்டிலிருந்து அவரது பர்சனல் அக்கவுண்டிருக்கு பத்தாயிரம் பணத்தை அனுப்பியுள்ளார். அதில் எரர் என வந்ததால். ’போன் பே’ செயலில் ஹெல்ப் பகுதிக்குச் சென்று மோகன் புகார் அளித்திருக்கிறார். அதன் பெயரில் மோகன் செல்போன் எண்ணிற்கு கஸ்டமர் கேர் பிரிவிலிருந்து ஒர் போன் வந்துள்ளது.

அதில் பேசிய நபர், `என்ன பிரச்னை சார்? போன் பே ஆப் அதிகாரிகள் பேசுகிறோம்’ என்று சொல்ல, இவர் நடந்தவற்றை எல்லாம் சொல்லியிருக்கிறார். பின்பு அவர்கள், `சார் உங்க நம்பருக்கு ஒரு ஓ.டி.பி நம்பர் வந்திருக்கா சார். உடனே டைம் அவுட் ஆவுறதுக்குள்ள அந்த நம்பரைக் கொஞ்சம் சொல்லுங்க. அஞ்சு நிமிஷத்துல உங்க பிரச்னையை சரிபண்ணுகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

அப்

அந்த ஓ.டி.பி எண்ணை மோகன் கொடுத்துள்ளார். அவர் பேசிவிட்டு போனை வைத்த கையோடு அவரது அக்கவுண்டிலிருந்து 9ஆயிரத்து 945 ரூபாய் பணம் எடுப்பதற்கான எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த மோகன் மீண்டும் கஸ்டமர் கேர் டிப்பார்ட்மெண்டை தொடர்புகொண்டிருக்கிறார். அவர்கள் சரியான பதிலைக் கொடுக்காததால், இது தொடர்பாகத் திருச்சி சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன், போன் பே ஆப் கஸ்டமர் கேர் ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

Also Read: 15 வருடங்களுக்கு முன்பே மோசடி மன்னர்களாக வலம்வந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ்; பெற்றோர் கைது!-நடந்தது என்ன?

இதுகுறித்து சைபர் கிரைம் அதிகாரிகளிடம் பேசினோம். ”மோகன் என்பவரிடம் ’போன் பே’ ஆப் கஷ்டமர் கேர் அதிகாரி பேசுவதாக ஒருவர் பேசியிருக்கிறார். அப்போது அந்த நபர், ‘போன் பே'யின் ஹெல்ப் பகுதிக்குச் செல்லுங்கள் என்றும் உங்களது அக்கவுண்ட் டீடெய்ல்ஸை அதில் பதிவு செய்யுமாறு கூறியதன் பேரில், மோகன் அவர்கள் சொன்ன அனைத்து விவரங்களையும் பதிவுசெய்திருக்கிறார்.

திருச்சி போலீஸார்

அடுத்தாக உங்களுக்கு வந்த ஓ.டி.பி எண்ணையும் கேட்டிருக்கிறார்கள். அதனையும் சொல்லியிருக்கிறார். அப்பறம் என்ன நடக்கும் நீங்களே யோசித்துப்பாருங்கள். ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் யாராக இருந்தாலும் ஒ.டிபி நம்பரோ, அல்லது ஏ.டி.எம் கார்டு நம்பர் அல்லது சி.வி.வி நம்பர் என எதைக்கேட்டாலும் யாரும் பகிரவேண்டாம் என்று பலமுறை அறிவுறுத்தியுள்ளனர். அப்படி இருந்தும் செய்தால் என்ன அர்த்தம். படிக்காதவர்கள் தான் செய்கிறார்கள் என்றால் இவர் படித்தவர், இவருக்குக் கூடவா தெரியாது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் எவ்வளவுக்கு எவ்வளவு நல்லது இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தீமைகளும் இருக்கிறது. நாம் தான் கவனமாக நடந்துகொள்ளவேண்டும்” என்று முடித்துக்கொண்டார்.



source https://www.vikatan.com/news/crime/trichy-it-guy-lost-money-after-sharing-otp-in-phone-call

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக