Ad

ஞாயிறு, 11 ஜூலை, 2021

ரன் ரேவதி ரன்... டோக்கியோ பறக்கும் தடகள தமிழச்சியின் சிறப்பு பேட்டி!

இந்தியாவுக்காக டோக்கியோவில் தங்கத்தை குறிவைத்து ஓட இருக்கிறார் ரேவதி. 4*400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள இருக்கும் ரேவதி ஸ்போர்ட்ஸ் விகடனுக்கு சிறப்பு பேட்டியளித்திருக்கிறார். இதில் தனது குடும்ப வறுமை முதல் தடகள தொடக்கம் வரை பல விஷயங்களைப் பேசியிருக்கிறார்.


‘’ரொம்ப சந்தோஷமா இருக்கு சார். இதுக்குத்தான் இவ்ளோ கஷ்டப்பட்டு இருந்தோம். கிடைக்குமா கிடைக்காதான்னு இருந்தது இப்ப கிடைச்சிடுச்சு. கோச் கண்ணன் சாருக்குத்தான் எல்லா நன்றியும். அவர் மட்டும் ஷூ வாங்கிக்கொடுத்து, ஹாஸ்ட்டல்ல சேர்க்காம இருந்திருந்தா இவ்ளோதூரம் வந்திருக்கவே முடியாது. வீட்டுக்குப் பக்கத்துல இருந்தவங்க பலபேரும் ‘பொண்ணுங்க ஆம்பளைங்க மாதிரி ஓடி என்ன பண்ணப்போறாங்க… எதாவது வேலைக்கு அனுப்பு'னு சொல்லிட்டே இருந்தப்பவும் பாட்டி எங்களை அத்லெட்டா தொடர சம்மதிச்சாங்க. இவங்க இருவருக்கும்தான் முதல் நன்றி சொல்லணும்' எனப் பல விஷயங்களைப் பேசியிருக்கிறார் ரேவதி.

தடகள வீராங்கனை ரேவதியின் வீடியோ பேட்டி இங்கே!


source https://sports.vikatan.com/sports-news/tokyo-olympic-indian-athlete-revathi-special-interview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக