நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்று ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராகவேந்திரா மணடபத்தில் நடைபெற்றுவரும் இந்த சந்திப்பில் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்திவருகிறார். தேர்தலுக்குமுன் கட்சி தொடங்குவது தொடர்பாக இங்கு அலோசனை நடத்தப்பட்டது. அதன்பின் கட்சித் தொடங்கப்போவதில்லை என அறிவித்தார் ரஜினி காந்த். அதன் பிறகு மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் வேறு கட்சிகளில் இணைந்தனர்.
சிலர் ரஜினி தனது முடிவை மறுபரிசீலணை செய்ய வேண்டுமேனத் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று மன்ற நிர்வாகிகளை சந்திக்கும்முன் பேசிய ரஜினி, " அண்ணாத்த ஷூட்டிங், கொரோனா, தேர்தல் அதன் பிறகு மெடிக்கல் செக்கப் இவற்றால் ரசிகர்களை, மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க முடியாமல் போனது. மக்கள் மன்றத்தின் பணி என்ன, அதைத் தொடரலாமா, என்ற கேள்விகள் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் ரசிகர்களுக்கும் உள்ளது. எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா என்பது குறித்து ரசிகர்களிடம் குழப்பம் உள்ளது; எனவே அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளேன்!" எனத் தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/politics/rajini-kanth-meets-rajini-makkal-mandram-cadre
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக