Ad

செவ்வாய், 13 ஜூலை, 2021

`போலீஸ்காரருக்குத் திருமணம் பேசி முடிக்கப்பட்ட பெண்; மதபோதகருடன், பாலியல் வழக்கில் கைதான பின்னணி!'

கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.டி மங்காடு பகுதியைச் சேர்ந்த லால் ஷைன் சிங் (40). இவர் மத போதகராக உள்ளார். இவர் எஸ்.டி மங்காடு பகுதியில் உள்ள தனது வீட்டில் 'பெடரல் சர்ச் ஆப் இந்தியா' என்ற பெயரில் சர்ச் நடத்தி வருகிறார். அவரது வீட்டில் இளம் பெண்கள் மற்றும் பல ஆண்கள் கார்களில் அடிக்கடி சென்று வந்துள்ளனர். ஆரம்பத்தில் அவர்கள் மத வழிபாட்டுக்காக செல்வதாக அப்பகுதி மக்கள் நினைத்தனர். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் சந்தேகப்படும்படியாக இருந்திருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீஸாருக்கு ரகசியமாகத் தகவல் கொடுத்தனர். போலீஸார் அந்த வீட்டை திடீரென சோதனை செய்தபோது அங்கு கேரளாவைச் சேர்ந்த பெண் உள்பட சில பெண்கள் மற்றும் ஆண்கள் அங்கு இருந்துள்ளனர். போலீஸார் விசாரிக்கத் தொடங்கினர். அதில் 19 வயது இளம் பெண்ணுடன் அவரது தாயும் இருந்துள்ளார். போலீஸ் விசாரணையில் அவரது தாய் அந்தப் பெண்ணை பாலியல் தொழிலுக்குத் தள்ளியது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்கள்

இதையடுத்து மத போதகர் லால் ஷைன் சிங், களியக்காவிளை அருகே பனங்காலை பகுதியைச் சேர்ந்த ஷைன் (34), மேக்காடு பகுதியைச் சேர்ந்த ஷிபின் (34), ஞாறான்விளை பகுதியைச் சேர்ந்த 55 வயது பெண், குறுமத்தூர் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் மற்றும் இரண்டு இளம் பெண்களை நித்திரவிளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர்களின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டை சர்ச்சாக மாற்றி அங்கு மத போதகத்திற்கு வருவது போல் இளம் பெண்களை அழைத்துச் சென்று பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

நித்திரவிளை போலீசார் மத போதகர் லால் ஷைன் சிங் மற்றும் இரண்டு இளம் வயது பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதுபற்றி போலீஸ் தரபில் கூறுகையில், "லால் ஷைன் சிங்கிற்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். வீட்டை சர்ச்சாக மாற்றிய அவர் அடிக்கடி பிரார்த்தனை கூட்டங்களை நடத்தியுள்ளார். வீட்டில் மனைவி, குழந்தைகள் இல்லாத சமயத்தில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.

பாலியல் தொழில் நடந்ததாக கூறப்படும் சர்ச்

கேரளாவில் இருந்தும் இளம் பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் அதில் 19 வயது பெண்ணின் தாயார் முன்பு காவல் நிலையத்தில் துப்புரவு வேலை செய்திருக்கிறார். அந்த பெண்ணுக்கு போலீஸ்காரர் ஒருவரை திருமணம் பேசி முடித்திருக்கிறார்கள். விரைவில் திருமணம் நடக்க உள்ள நிலையில் அந்த பெண் தாயின் தவறான வழிகாட்டுதலால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளார்" என்றார்.



source https://www.vikatan.com/news/crime/police-arrested-7-people-in-kanyakumari-for-illegal-activities

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக