Ad

திங்கள், 26 ஜூலை, 2021

``வெற்றிமாறன் வார்த்தைகள்தான் பாசிட்டிவிட்டி கொடுத்துச்சு!" - `நாரப்பா' அனுபவம் குறித்து பிரியாமணி

அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் `நாரப்பா' அமேசான் ப்ரைமில் வெளியானது. `வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு தனுஷின் நடிப்பில் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தெலுங்கிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறது. தெலுங்கில் ஸ்ரீகாந்த் அடலா இயக்கத்தில் வெங்கடேஷ் - பிரியாமணி முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். தமிழில் தனுஷின் மனைவியாக வந்த மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தில் தெலுங்கில் பிரியாமணி நடித்துள்ளார். பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகாக மனம் கவர்ந்தவர் மீண்டும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாரப்பா பட அனுபவம் குறித்து நடிகை பிரியாமணியிடம் பேசினோம்.

Karthi, Priyamani

Also Read: "லண்டன்ல `அசுரன்' படம் பார்த்தப்போ... தனுஷ் சார் சொன்ன அந்த விஷயம்..." - `ஜகமே தந்திரம்' சரத் ரவி

``அசுரன் படத்தை ஏற்கெனவே நான் பார்த்துட்டதால அதோட தெலுங்கு ரீமேக்லதான் பண்ணப்போறேன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். தெலுங்குல நிறைய கிளாமர் ரோல்களே பண்ணதால இந்த கேரக்டரும் சரி, கெட்டப்பும் சரி, என்னோட தெலுங்கு ஆடியன்ஸுக்கு ரொம்பவே புதுசு. ஆனா, தமிழ்ல அப்படி இல்ல, என்னோட முதல் படமே பருத்திவீரன். முத்தழகு கேரக்டர்ல கிராமத்துப் பொண்ணா நடிச்சிருந்தேன். கிளாமர் கேரக்டர்கள்லேயே பெரும்பாலும் என்னைப் பார்த்துவந்த தெலுங்கு ஆடியன்ஸுக்கு என்னோட இன்னொரு பக்கத்தையும் நாரப்பா மூலம் காட்ட முடிஞ்சிருக்கு.

கிராமத்து கேரக்டர்ல நடிக்குறது வெங்கடேஷ் சாருக்கு இதுவே முதல்முறை. இருந்தாலும் வேற லெவல்ல நடிச்சிருந்தாரு. ஏற்கெனவே, ஹிட் கொடுத்த அசுரன் படத்தை ரீமேக் பண்ணணும்னா என்னோட நடிப்பு ரசிகர்களுக்குப் பிடிக்கணும். அதனாலேயே நாரப்பா படத்துல நடிக்கிறது ரசிகர்களுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோன்னு ரொம்ப யோசிச்சேன். ஆனா, இவ்வளவு பாராட்டுகள் குவியும்ன்னு நினைக்கல. நாரப்பா படத்துல நடிச்சிட்டு இருக்கிறதை வெற்றிமாறன்கிட்ட சொன்னப்போ ``எனக்குத் தெரியும் நீங்க ரொம்ப நல்லா பண்ணுவீங்க"ன்னு சொன்னாரு. ஷூட்டிங் நடந்தபோதெல்லாம் அவரோட வார்த்தைகள்தான் பயங்கர பாசிட்டிவிட்டியைக் கொடுத்துச்சு.

Priyamani in Narappa

Also Read: ``எனக்கான அங்கீகாரம் கிடைக்கலை... அந்த கேரக்டர் கிடைக்கலை..!?’’ - பிரியாமணி

அசுரன் திரைப்படத்துல மஞ்சு சேச்சியோட நடிப்பு அவ்வளவு நேர்த்தியா இருந்துச்சு. நான் நடிக்குற ஒவ்வொரு கேரக்டரையும் கவனமாகத் தேர்ந்தெடுப்பேன். எனக்கும் அந்த கேரக்டர்களுக்குமான பந்தம் டைரக்டர் கட் சொன்னதோட முடிஞ்சுடும்... அவ்ளோதான். படம் ஹிட் அடிக்குறதும் அடிக்காததும் என் கையில இல்ல. அப்படித்தான் நாரப்பா படமும்... தேர்ந்தெடுத்தேன்... நடிச்சேன்..!" என்கிறார் நடிகை பிரியாமணி.



source https://cinema.vikatan.com/tamil-cinema/actress-priyamani-speaks-about-narappa-movie-experience

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக