Ad

புதன், 16 ஜூன், 2021

சென்னை: பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்! #NowAtVikatan

மோடியை சந்திக்க புறப்பட்டார் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். முதல்வராக பதவியேற்றப்பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் நீட் தேர்வு, ஜி.எஸ்.டி, காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான கோரிக்கை மனுவையும் வழங்குவார். சென்னை ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்ட ஸ்டாலின், விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

ஸ்டாலின் - மோடி

டெல்லியில், தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுக்கும் ஸ்டாலின், மாலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். சந்திப்பு முடிந்த பின்னர் மீண்டும் இரவில் தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். பின்னர் நாளை தனிவிமானம் மூலம் சென்னை திரும்புகிறார் ஸ்டாலின். இதனிடையே காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை ஸ்டாலின் சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது!



source https://www.vikatan.com/news/general-news/17-06-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக