Ad

வெள்ளி, 18 ஜூன், 2021

Covid Questions: ஹெச்.ஐ.வி பாதித்தவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாமா?

ஹெச்.ஐ.வி பாதித்தவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?

- சுரேஷ் சிவகாமி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் விஜயலட்சுமி

Also Read: Covid Questions: கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எத்தனை நாள்கள் கழித்து ரத்ததானம் செய்யலாம்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.

``ஹெச்.ஐ.வி பாதிப்புள்ள நபர்கள் நிச்சயம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு, ஹைரிஸ்க்கில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டபோதே ஹெச்.ஐ.வி நோயாளிகளும் அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். நோய் எதிர்ப்பாற்றல் திறன் குறைவாக உள்ளவர்கள் பட்டியலில் வருவதால் இவர்கள்தான் இன்னும் சீக்கிரமே தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டியவர்கள்".

ரத்தம் உறையாமை பிரச்னை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளலாமா?
-
கண்ணதாசன் தியாகராஜன் (விகடன் இணையத்திலிருந்து)

``சிலர் சில பிரச்னைகளுக்காக ரத்தம் உறைவதைத் தடுக்கும் மருந்துகள் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருப்பார்கள். பிளட் தின்னர் எனப்படும் இவற்றில் இரண்டு வகை உள்ளன. ஒன்று ஆஸ்பிரின் போன்ற ஆன்டிபிளேட்லெட்ஸ், மற்றொன்று ஆன்டிகுவாகுலன்ட்ஸ். இவர்கள் தவிர இன்னொரு பிரிவினருக்கு பிளேட்லெட்ஸ் எனப்படும் தட்டணுக்கள் குறைவாக உள்ள நோய்கள் இருக்கும். உதாரணத்துக்கு சிலவகை புற்றுநோய், ஐடிபி எனப்படும் Idiopathic Thrombocytopenic Purpura போன்றவை. அடுத்து கல்லீரல் நோயாளிகள். இவர்கள் அனைவருக்குமே ரத்தம் உறையும் தன்மை குறைவாக இருக்கும். இவர்களுக்கெல்லாம் தட்டணுக்களின் எண்ணிக்கை 50,000 என்ற அளவுக்கு வந்தாலே தடுப்பூசி கொடுத்துவிடுவோம்.

COVID-19 vaccine

Also Read: Covid Questions: தடுப்பூசி போட்டவுடன் ரத்தம் உறைவதைத் தவிர்க்க ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளலாமா?

இவர்களுக்கெல்லாம் நேரடியாக தசையில் ஊசியைச் செலுத்தினால் ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் சருமத்துக்கும் தசைக்கும் இடையிலுள்ள பகுதியில் ஊசி தொடும்படியாக மருந்தைச் செலுத்துவோம். இது deep subcutaneous முறை எனப்படுகிறது. தட்டணுக்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால்தான் வழக்கமான முறையில் ஊசி செலுத்தப்படும், ரத்தம் உறையாமை பிரச்னைக்கான மருந்துகள் எடுத்துக்கொள்வோர், தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது அந்த மருந்துகளை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. அந்த மருந்துகளை எடுத்துக்கொண்டே மேற்சொன்ன டீப் சப்கியூட்டேனியஸ் முறையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கல்லீரல் மற்றும் இதய நோயாளிகள் விஷயத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறித்த சந்தேகம் எழுந்தால் அதற்கான டெஸ்ட் எடுத்துப் பார்த்து அதற்கேற்ப தடுப்பூசி போடுவோம்".

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/can-hiv-positive-people-take-vaccines-for-covid-19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக