Ad

புதன், 16 ஜூன், 2021

Covid Questions: கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எத்தனை நாள்கள் கழித்து ரத்ததானம் செய்யலாம்?

கொரோனா பாதித்தவர்கள் முதல் தவணை தடுப்பூசியை எப்போது போட்டுக்கொள்ளலாம்? எப்போது ரத்த தானம் செய்யலாம்?

- கண்ணதாசன் தியாகராஜன் (விகடன் இணையத்திலிருந்து)

தொற்று நோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

Also Read: Covid Questions: தடுப்பூசி போட்ட சில நாள்களில் டிடி ஊசி போட்டால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.

``கோவிட் தொற்றுக்குள்ளானவர்கள், அதிலிருந்து முழுமையாக குணமானதும் மூன்று மாதங்களுக்குப் பிறகு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

ரத்த தானத்தைப் பொறுத்தவரை கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு, இரண்டு வாரங்கள் கழித்துச் செய்யலாம். இந்த இரண்டு வார அவகாசம் என்பது தானம் கொடுப்பவர்களுக்கும் தானம் பெறுபவர்களுக்குமான ஒருவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே. அதாவது, தடுப்பூசி போட்டுக்கொண்டதன் விளைவாக ஏற்படுகிற சில அசௌகர்யங்களை, ரத்த தானம் செய்ததன் விளைவுகளாகக் குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதற்காக மட்டுமே இந்த இடைவெளி என்று புரிந்துகொள்ளவும்.

கொரோனா தடுப்பூசி

Also Read: Covid Questions: கொரோனா குணமான பின்னர் அவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவுமா?

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ரத்ததானம் செய்வதால் அடுத்தவருக்குத் தொற்றைப் பரப்புவார் என்பதற்கோ, தானம் பெறுபவர்களுக்கு ரத்தம் உறைதல் பிரச்னை வரும் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இரு தரப்பினருக்கும் அது பற்றிய பயம் தேவையில்லை."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/after-how-long-can-covid-19-recovered-person-donate-blood

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக