Ad

வெள்ளி, 4 ஜூன், 2021

அப்போலோ மருத்துவமனையில் மாடர்னா தடுப்பூசி செலுத்தப்படுகிறதா... உண்மை என்ன?!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியாக மாடர்னா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று சமூக வலைத்தளங்களில் உலவும் தகவல்கள் தவறானவை என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இப்போது கோவிஷீல்டு, கோவாக்ஸின், ஸ்புட்னிக் ஆகிய மூன்று தடுப்பூசிகளே கொரோனாவுக்கான தடுப்பூசிகளாகச் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன; மாடர்னா தடுப்பூசிக்கு இதுவரை இந்தியாவில் அனுமதி வழங்கப்படவில்லை. இந்தப் பின்னணியில் அப்போலோ மருத்துவமனையில் மாடர்னா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

Also Read: கோவிட் தடுப்பூசி: `12 - 17 வயது சிறார்களிடம் 100% எதிர்ப்பு சக்தி!' - மாடர்னா அறிவிப்பு

சென்னை அப்போலோ மருத்துவமனையில் மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக, சமூக வலைத்தளங்களில் உலவும் அப்போலோ மருத்துவமனை ரப்பர் ஸ்டாம்பு வைக்கப்பட்ட தடுப்பூசி ஆவணங்கள் போலியானவை, அவை அப்போலோ மருத்துமனையால் வெளியிடப்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி

இந்தியாவில் மாடர்னா தடுப்பூசிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை; மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கோ-வின் தளம் வழியாகவே அதிகாரப்பூர்வ தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படுகிறது. எனவே சமூக வலைத்தளங்களில் உலவும் ஆவணங்களின் உண்மைத் தன்மை குறித்து பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். போலி ஆவணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அப்போலோ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என்றும் அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/healthy/apollo-hospitals-deny-moderna-vaccination-certificate-circulating-in-social-media

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக