Ad

வெள்ளி, 18 ஜூன், 2021

மில்கா சிங் : இந்தியாவுக்காக ரோம் ஒலிம்பிக்கில் கனவுகளோடு ஓடிய கால்கள்... ஓட்டத்தை முடித்தது!

91 வயதான முன்னாள் இந்திய தளகள வீரர் மில்கா சிங்கின் மரணம் நாடு முழுக்க துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 1960-ம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் நான்காம் இடம்பிடித்து மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்டாலும், இந்தியா முழுக்க மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தார் மில்கா சிங். இந்திய இளைஞர்களின் தடகளக் கனவை தட்டி எழுப்பியவர் மில்கா சிங்தான்.

பறக்கும் மனிதன் என கொண்டாடப்பட்ட மில்கா சிங் சிங் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நான்குமுறை தங்கப் பதக்கம் வென்றவர். காமென்வெல்த் போட்டிகளிலும் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றவர். இவர் படைத்திருக்கும் தேசிய அளவிலான சாதனைகள் எண்ணற்றவை!

மில்கா சிங்

கொரோனா தொற்று காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லி மருத்துவமனையில் மனைவியோடு அனுமதிக்கப்பட்டார் மில்கா சிங். நாட்கள் கடந்தபோதும் உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படாத நிலையில் குடும்பத்தினர் அவரை வீட்டுக்கு அழைத்துசெல்ல விரும்பியதால் சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் மரணமடைந்த நிலையில் நேற்று இரவு மில்கா சிங் மரணமடைந்தார்.

மில்கா சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட நாட்டின் முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.



source https://sports.vikatan.com/sports-news/indias-flying-man-milkha-singh-died-due-to-corona

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக