Ad

வெள்ளி, 18 ஜூன், 2021

கொரோனா: `விருதுகள், பரிசுத் தொகைகள்!’ - தடுப்பூசி விவகாரத்தில் அசத்தும் புதுச்சேரி சுகாதாரத்துறை

புதுச்சேரியில் நடைப்பெற்றுவரும் கொரோனா தடுப்பூசி முகாமை தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் T.அருண் தலைமையில் நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில் ஜூன் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை புதுச்சேரியின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் பேசிய சுகாதாரத்துறை செயலர் டாக்டர் அருண், “தடுப்பூசி முகாமுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது தெரிய வந்திருப்பதால் தடுப்பூசி முகாமை மேலும் இரண்டு நாட்களுக்கு (ஜூன் 20 மற்றும் 21) நீட்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி

அதேபோல கொரோனா தடுப்பூசியை 100% போட்ட முதல் பத்து கிராமங்களுக்கு விருது வழங்கப்படும் என்றும், தடுப்பூசி திருவிழாவின் ஊசி போட்டுக்கொண்டவர்களில் நாளொன்றுக்கு 25 பேருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதன் மூலம் மக்கள் மேலும் ஆர்வத்துடன் அதிக அளவில் கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி கொள்வார்கள். மேலும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த பெரும் முயற்சிகள் எடுத்த ஒரு பிளாக்குக்கு 2 அங்கன்வாடி ஊழியர்கள் வீதம் 10 சிறந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கும், ஐந்து சிறந்த பஞ்சாயத்து லெவல் ஃபெடரல் அவர்களுக்கும், ஐந்து சிறந்த ஆஷா பணியாளர்களுக்கும், ஐந்து சிறந்த துப்புரவு தொழிலாளர்களுக்கும், ஐந்து சிறந்த களப்பணி குழுவினருக்கும், ஐந்து சிறந்த ஆரம்ப சுகாதார மையங்களுக்கும், ஐந்து தன்னார்வலர்கள் மற்றும் தனிநபர்களுக்கு பரிசுத் தொகையுடன் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/puducherry-health-department-planned-to-give-prize-and-award-for-corona-vaccination

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக