Ad

வெள்ளி, 18 ஜூன், 2021

`சசிகலாவுடன் உரையாடுவோர் மீது நடவடிக்கை!’ - அ.தி.மு.க ஐ.டி.விங் தீர்மானம்

சமீபகாலமாக அ.தி.மு.க நிர்வாகிகளுடன் சசிகலா தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடுவதுடன், அதை ஊடகங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இது அ.தி.மு.க-வுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்படி பேசிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

ராஜ் சத்யன்

இந்நிலையில் சசிகலாவுடன் பேசுகிறவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்றும், ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தான் கட்சியை வழிநடத்த வேண்டுமென்றும் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள்.

அவர்களைத் தொடர்ந்து அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணியும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது.

மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜ் சத்யன் தலைமையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் 18 மாவட்டங்களின் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "ஜெயலலிதா கற்றுத்தந்த பாதையில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுப்பாட்டோடு தொண்டர்களின் பேராதரவோடு கழகத்தை வழிநடத்தி செல்கின்றனர் .

அதிமுக ஐடி விங்

நாளுக்குநாள் கழகம் வலுவும், பொலிவும், மக்கள் செல்வாக்கும் பெற்று சிறப்புடன் செயலாற்றி வரும் நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தற்போது ஒவ்வொரு நாளும் அ.தி.மு.க பற்றி சம்பந்தமில்லாத கருத்துக்களை தொலைபேசி மூலம் சிலருடன் பேசி வருவதும், அதை ஊரறிய ஊடகங்களில் ஒளிபரப்புவதுமாக செயல்படுகிறார்.

ஆனால், அ.தி.மு.க-வின் ஒன்றரை கோடி தொண்டர்கள் அவரின் செயலை நம்பவும் இல்லை, ரசிக்கவும் இல்லை. அ.தி.மு.க மக்களின் பேரியக்கமாகவே வரலாற்றில் நிலை பெற்றுள்ளதே தவிர ஒரு குடும்பத்தினர் வசப்படுத்தி கொள்ளும் வகையில் என்றைக்கும் இருக்காது.

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கழகத்தின் புகழுக்கு களங்கம் உண்டாக்கிய அனைவரையும் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கவேண்டும்.

ராஜ் சத்யன்

இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கழக ஒருங்கிணைப்பாளர்களை
வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்" என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்.



source https://www.vikatan.com/news/politics/admk-it-wing-resolution-against-sasikala

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக