'நம்ம ஊர் பொங்கல் விழா' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பா.ஜ.க நிகழ்ச்சி நடத்தி வருகிறது. மதுரையில் நடந்த விழாவில் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்புகலந்து கொண்டார்.
மாரியம்மன் தெப்பக்குளம் அருகே நடந்த விழாவில் பொங்கல் வைத்த குஷ்பு, பின்பு கிராமியக் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். `பஞ்சு மிட்டாய் சேலைகட்டி', 'ஒத்த ரூபா தாரேன்....' என அவர் நடித்த படப் பாடல்களை பாடகர்கள் பாடிகுஷ்புவை மகிழ்ச்சிப்படுத்தினார்கள்.
அதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு,``தமிழகத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்று கடந்த வருடம் வரை கேள்வி கேட்டார்கள். தற்போது தமிழகத்தில் பா.ஜ.க கொடி இல்லாத இடமே இல்லை.
தமிழகத்தில் பாஜக பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதற்காக யாரும் குரல் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. பிரதமர் மோடி ஒருவர் குரல் கொடுத்தாலே போதும்’’ என்றார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பீர்களா?' என்ற கேள்விக்கு,``ரஜினியின் ஆதரவைக் கேட்க வேண்டும் என்பது எனக்குத் தேவையில்லை" என்றார்.
``தேர்தலில் எங்கு போட்டியிடுவீர்கள்?"' என்றதற்கு, ``நான் எங்கு போட்டியிடுவேன் என்பது எனக்கே தெரியாது. டெல்லி தலைமையும் இங்கே இருக்கும் தலைவர்களும்தான் அதை முடிவு செய்வார்கள். ஆனால், வருகிற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் எதிர்த்துப் போட்டியிட தயாராக இருக்கிறேன்" என்றவர், தொடர்ந்து பேசும்போது,
Also Read: புதுச்சேரி: `ஊழல் என்றால் என்னவென்று நாட்டுக்கே சொன்னது காங்கிரஸ்தான்!' - நடிகை குஷ்பு
``கலைஞர் குடும்பத்திலிருந்து வந்த உதயநிதி ஸ்டாலின் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசியது கண்டனத்துக்குரியது.இல்லத்தரசிகள் அனைவரும் தினந்தோறும் தம் இல்லங்களில் வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது சம்பந்தமான கமலின் அறிவிப்பை வரவேற்கிறேன்.
பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் எந்தக் கட்சியினராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க சார்பில் பெண்கள் அதிகமாகப் போட்டியிடுவதற்கு பிரதமர் மோடி விரும்புகிறார்’’ என்றார்.
source https://www.vikatan.com/news/politics/ready-to-compete-with-stalin-says-bjp-kushboo
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக