Ad

வியாழன், 7 ஜனவரி, 2021

"அரசியல்ல இருந்து சினிமாவுக்கு வரக் கூடாதா?" - மனுஷ்ய புத்திரன்

கொரோனா காலகட்டத்தில் மிகவும் பரபரப்பாக இருக்கும் ஒரே நடிகர் சிம்புதான். 'ஈஸ்வரன்' படத்தை முடித்துவிட்ட சிம்பு இப்போது 'மாநாடு' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்து நடிக்க பல இயக்குநர்களிடம் கதை கேட்டு ஓகே சொல்லியிருக்கும் சிம்பு, கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த 'மஃப்ட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்கயிருக்கிறார். 'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய கிருஷ்ணாதான் இயக்குநர். படத்துக்கு 'பத்து தல' என டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

பத்து தல

படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் கெளதம் கார்த்திக் மற்றும் டீஜே ('அசுரன்' படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்தவர்) இருவரும் நடிக்கின்றனர். இந்நிலையில் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் கவிஞர் மற்றும் அரசியல் விமர்சகரான மனுஷ்யபுத்திரன் நடிக்கயிருக்கிறார். அவரிடம் பேசினேன்.

''இந்தப் படம் நடிகரா எனக்கு நாலாவது படம். எனக்கான கேரக்டர்கள் வர்றப்போ அதை ஏற்று நடிக்கிறதை நான் எப்பவும் விரும்புவேன். 'சூப்பர் டீலக்ஸ்' படத்துல டாக்டர் ரோலில் நடிச்சிருப்பேன். இந்தப் படத்துக்காக இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா என்கிட்ட நடிக்கக்கேட்கும்போது 'உங்களுடைய வாய்ஸ் ரொம்ப யுனிக். நான் எழுதுயிருக்குற டயாலக்ஸ் நீங்க பேசுனா நல்லாயிருக்கும். உங்க வாய்ஸ் அதுக்கு உயிர் கொடுக்கும்'னு சொன்னார். எனக்கு குமாரராஜா சொன்னது பிடிச்சிருந்தது.

சிம்பு, கெளதம் கார்த்திக்

இப்ப 'பத்து தல' படத்துல நடிக்க இருக்கேன். இந்தப் படத்தோட இயக்குநர் கிருஷ்ணா எனக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்திருக்கார். சமூக மாற்றத்துக்காக போராடுற ஒருவரா நடிக்கிறேன். ஒரு படத்தோட ஸ்க்ரிப்ட் டிஸ்கஷன் மற்றும் பாடல் வரிகளில் வேலைப் பார்க்க கூப்பிடுறதைவிடவும், நடிக்க கூப்பிடுறப்போ ரொம்ப உற்சாகமா உணர்றேன். நடிகனா என்னைப் பார்க்குறது எனக்கு கூடுதல் சந்தோஷத்தை கொடுக்குது.

ஒரு கவிஞரா, பத்திரிகையாளரா, அரசியல் விமர்சகரா இருந்தாலும், சினிமாங்குறது நான் ரொம்ப விரும்புற மீடியம். படத்தோட வெற்றிக்கு என்னால முடிஞ்சதை பண்ண முடிஞ்சா சந்தோஷம்" என்றவரிடம், "தேர்தல் நேரத்தில் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறீர்களே?" எனக் கேட்டேன்.

சிம்பு

"தமிழ்நாட்டுல சினிமால இருந்து பலரும் அரசியலுக்கு போனப்போ, அரசியல்ல இருந்து நான் சினிமாவுக்குப் போகக் கூடாதா? படத்தோட ஷூட்டிங் சீக்கிரமே தொடங்கிடும். போட்டோ ஷூட் முடிஞ்சிடுச்சு. படத்துல என்னோட லுக்கைப் பார்க்க நானே ஆர்வமா இருக்கேன்" என்று சிரிக்கிறார்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/writer-manushya-puthiran-committed-in-simbus-new-movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக