Ad

சனி, 1 ஆகஸ்ட், 2020

Corona Live Updates: உலக அளவில் 1.77 கோடி; இந்தியாவில் 17 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

இந்தியாவில் 17 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,50,723 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 54,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 853 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,403ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,46,879 ஆகவும் உயர்ந்துள்ளது.

Also Read: அறைகளில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் கருவி... சர்ச்சையும் விளக்கமும்!

கொரோனா - உலக நிலவரம்!

Corona

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,77,91,377 உயர்ந்துள்ளது. 6,83,988 அதிகமானோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 46,20,239 ஆக அதிகரித்திருக்கிறது. இதனால், 1,54,361 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

Also Read: `அவரை நம்பி வரும் ஏழைகளுக்குதான் இழப்பு!' - கொரோனா பலிகொண்ட கோவை நரம்பியல் மருத்துவர்



source https://www.vikatan.com/news/general-news/02-08-2020-corona-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக