நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என அண்மையில் அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் ரஜினி காந்த் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் ரஜினிகாந்த், ``என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு...
நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர் ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பில் இருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.
கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுக்கள் இருந்தாலும் தலைமையில் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது.
தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்.
என் முடிவை கூறிவிட்டேன்.
தயவுகூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
வாழ்க தமிழ் மக்கள் வளர்க தமிழ்நாடு ஜெய்ஹிந்த்” என் குறிப்பிட்டுள்ளார்.
Also Read: ரஜினி : இப்போ கட்சி இல்லை... அப்போ வாய்ஸ் உண்டா?
source https://www.vikatan.com/government-and-politics/politics/rajini-letter-to-fans-regarding-his-political-stand
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக