ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள ஹண்டர்கஞ் பகுதியில் வசிக்கும் 50 வயது கணவனை இழந்த பெண் ஒருவர் கடந்த வியாழக்கிழமை, இரவு 10 மணியளவில் இயற்கை உபாதையை கழிக்க வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அவரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் அப்பெண்ணை மிக மோசமான முறையில் தாக்கி உள்ளனர். இச்சம்பவம் குறித்து வெளியில் கூற கூடாது என்று மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இந்த கொடூரச் சம்பவத்தால் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அப்பெண்ணை அவரின் உறவினர் மீட்டு ஹண்டர்கஞ் ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர்.
பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பீகார் மாநிலம் கயாவில் உள்ள அனுக்ரா நாராயண் மகத் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். தற்போது மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ள அப்பெண் காவல்துறையில் அளித்த புகாரின் பெயரில் அவரை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய மூன்று பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரை தேடும்பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் ரிஷாப் ஜா, `பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடு ஒன்றை குற்றசாட்டபட்ட மூவரில் ஒருவர் தாக்கியதாக தெரிகிறது. அதற்கான இழப்பு தொகையை பாதிக்கப்பட்ட பெண் கேட்க, கோபத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்துள்ளோம். மேலும் ஒருவரை தேடி வருகிறோம்” என்றார், மேலும் காயமுற்ற ஆட்டிற்கான தொகையை பெற்று தர வேண்டும் எனவும் அதற்கு தான் கொடுத்த விலை மிக பெரியது எனவும் அப்பெண் கூறியதாக, அவர் தெரிவித்தார்.
Also Read: தானே: சோஷியல் மீடியா நட்பு; கூட்டுப் பாலியல் வன்கொடுமை! - குஜராத் ஆண் மாடலுக்கு நேர்ந்த கொடுமை
source https://www.vikatan.com/news/crime/50-year-old-widow-gangraped-by-3-men-in-jharkhand
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக