புதிய ப்ரைவசி கொள்கைகளை அமல்படுத்த விடாமல் வாட்ஸ்அப்பை தடுக்க வேண்டும்; வாட்ஸ்அப் மற்றும் அதன் தாய் நிறுவனமான பேஸ்புக்கைத் தடைசெய்ய வேண்டும் என்றும் வணிகர் கூட்டமைப்பான CAIT மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
வாட்ஸ்அப் சமீபத்தில் அதன் ப்ரைவசி கொள்கைகளை மாற்றுவதாக அறிவித்தது. இது குறித்து அனைவருக்கும் ஒரு பாப்-அப் மெசேஜ் வந்திருக்கும். மாற்றப்பட்ட கொள்கைகள் வாட்ஸ்அப் பாதுகாப்பானது தானா எனப் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது. இதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ளக் கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்
Also Read: `Agree' கொடுக்கவில்லை என்றால் `Access' கட்... வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி பாலிசி சொல்வது என்ன?
புதிய ப்ரைவசி கொள்கைகள் மூலம் அனைத்து விதமான தனிப்பட்ட தகவல்களையும், பணப் பரிவர்த்தனை தகவல்கள், தொடர்புகள், இருப்பிடம் என வாட்ஸ்அப் அனைத்தையும் கைப்பற்றுகிறது. இவற்றை எதற்கு வேண்டுமானாலும் அந்நிறுவனம் பயன்படுத்தலாம் எனத் தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்துக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது CAIT.
வாட்ஸ்அப் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. "வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்காகவே ப்ரைவசி கொள்கைகளை மாற்றினோம். ஃபேஸ்புக்குடன் தகவல் பகிர்வதில் இதனால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பேசிக்கொள்வதும் எந்த விதத்திலும் பாதிக்கப்படப்போவதில்லை.
பயனர்களின் ப்ரைவசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனால்தான் இந்த மாற்றத்தை அனைவருக்கும் நேரடியாகத் தெரிவித்தோம். ஒரு மாதம் முன்னரே தெரிவித்ததால் இது பற்றிய புரிதலைப் பெற அவர்களுக்கு நேரம் கிடைக்கும்" என்று தெரிவித்திருக்கிறார் வாட்ஸ்அப்பின் செய்தி தொடர்பாளர்.
இந்த விவகாரத்தில் அரசு குறுக்கிட வேண்டுமா... தடைசெய்யும் அளவுக்கு ஆபத்தானதா வாட்ஸ்அப்... உங்கள் கருத்துகளை கமென்ட்களில் பதிவிடுங்கள்!
source https://www.vikatan.com/technology/tech-news/cait-asks-meity-to-ban-whatsapp-facebook-over-new-privacy-policy-row
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக