Ad

திங்கள், 11 ஜனவரி, 2021

"கல்லூரி மாணவர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா!"- முதல்வர் பழனிசாமி... உங்கள் கருத்து? #VikatanPoll

கொரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், தற்போது வரை மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் தினமும் 2ஜிபி இலவச டேட்டா வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதற்கு பாராட்டுகளும் அதே சமயம் பல்வேறு விமர்சனங்களும் வந்துள்ளன. மிகவும் தாமதமாக இந்த சலுகையை அறிவித்திருப்பதன் மூலம் தேர்தல் ஓட்டுகளைப் பெற நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்பது போன்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் எட்டிப் பார்க்கின்றன.

கல்லூரி மாணவர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? #VikatanPoll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...


source https://www.vikatan.com/government-and-politics/education/vikatan-poll-regarding-edappadi-palaniswamis-2gb-internet-data-offering

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக