வாட்ஸ்அப்பின் புதிய ப்ரைவசி பாலிசி குறித்துப் பல குழப்பங்களும் சந்தேகங்களும் நிலவி வருவதால் பலரும் மாற்றுச் சேவைகள் என்னவெல்லாம் இருக்கிறது எனத் தேட ஆரம்பித்திருக்கின்றனர். அதில் நீங்களும் ஒருவர் என்றால் உங்களுக்காகத்தான் இந்த பட்டியல்.
டெலிகிராம் (telegram)
ஏற்கெனவே பிரபலமாக இருக்கும் ஒரு மெசேஜிங் தளம் டெலிகிராம். வாட்ஸ்அப்பை விடவும் அதிக வசதிகள் கொண்டிருந்தாலும் இது எண்டு-டு-எண்டு என்க்ரிப்ட் செய்யப்பட்ட சேவை இல்லை. 'Secret Chat'-ல் மட்டுமே அது கிடைக்கும்.
சிக்னல் (Signal)
எலான் மஸ்க் தொடங்கி பலரும் 'நாங்கள் கேரன்ட்டி' எனப் பரிந்துரைக்கும் சேவை இது. லாபநோக்கற்ற ஒரு அமைப்பு நடத்தும் 'சிக்னல்', ப்ரைவசிக்கு முன்னுரிமை தருகிறது, மெசேஜ் மட்டுமல்ல நீங்கள் யாருக்கு மெசேஜ் அனுப்புகிறீர்கள் என்பதைக் கூட என்க்ரிப்ட் செய்கிறது.
கீபேஸ் (Keybase)
ஓபன்-சோர்ஸ் சாட்டிங் தளமான இது அதன் பாதுகாப்புக்காகப் பெயர்பெற்ற ஒரு சேவை. மெசேஜ்கள் அனைத்தும் எண்டு-டு-எண்டு என்க்ரிப்ட் செய்யப்படும் இந்த சேவை ஸ்க்ரீன்ஷாட் எடுக்கக்கூட அனுமதிக்காது.
வைபர் (Viber)
ஏற்கெனவே பிரபலமாக இருக்கும் மற்றுமொரு மெசேஜிங் சேவை. வசதிகளில் வாட்ஸ்அப்பில் எந்த அளவிலும் குறைந்ததில்லை வைபர். எண்டு-டு-எண்டு என்கிரிப்ஷன் தொடங்கி அனைத்துமே இதிலும் இருக்கிறது. இதை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களிலும் பயன்படுத்த முடியும்.
ஸ்னாப்சாட் (Snapchat)
இது மெசேஜிங் சேவை எனச் சொல்ல முடியாதுதான். சமூக வலைதள சேவை என்றாலும் சாட்டிங் சேவைக்காக மட்டும் பயன்படுத்தும் அளவுக்குப் பல வசதிகளைக் கொண்டுள்ளது ஸ்னாப் சாட்.
ஸ்கைப் (Skype)
வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸுக்கு பெயர்பெற்ற ஸ்கைப்பால் ஒரு சிறந்த சாட்டிங் ஆப்பாகவும் செயல்பட முடியும். அதிக காலிங், கொஞ்சம் சாட்டிங் என இருப்பவர்களுக்கு ஸ்கைப் பெர்ஃபெக்ட் சாய்ஸ்.
டிஸ்கார்டு (Discord)
கேமர்ஸ் அவர்களுக்குள் பேசிக்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட சேவை இன்று அனைவரும் பயன்படுத்தும் அளவு வசதிகளால் நிரம்பி வழிகிறது. வாய்ஸ் கால்ஸ், வீடியோ கால்ஸ் என அனைத்தையும் இந்த சேவையிலும் செய்யலாம்.
கிக் (Kik)
மொபைல் நம்பர் கொடுக்காமல் மெசேஜிங் சேவை பயன்படுத்த நினைப்பவர்களுக்குச் சிறந்த சாய்ஸ் கிக். எமோஜி, ஸ்டிக்கர்ஸ், GIFs, குரூப் சேட் என அனைத்து வசதிகளிலும் இதிலும் உண்டு.
த்ரீமா (Threema)
இவற்றில் மிகவும் பாதுகாப்பான மெசேஜிங் சேவைகளுள் ஒன்று த்ரீமா. அனைத்தையும் என்கிரிப்ட் செய்யும் இது இலவச சேவை கிடையாது. இதற்குப் பணம் கட்ட வேண்டும். தகவல் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பவர்கள் த்ரீமா பக்கம் ஒதுங்கலாம்.
அரட்டை (Arattai)
நம்ம ஊர் ஜோஹோ நிறுவனத்தின் தயாரிப்பு இது. தற்போது பீட்டா வெர்ஷனில் இருக்கும் இது விரைவில் முழுவதுமாக அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. தற்போது எண்டு-டு-எண்டு எனகிரிப்ஷன் இல்லை என்றாலும் முழுவதுமாக அறிமுகமாகும்போது அது இடம்பெறும் என்கிறது ஜோஹோ தரப்பு.
source https://www.vikatan.com/ampstories/technology/tech-news/signal-to-arattai-10-whatsapp-alternatives
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக