உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஜினியின் உடல்நிலை சீராகிவிட்டது. இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்புகிறார் ரஜினி.
டிசம்பர் 14-ம் தேதி தொடங்கிய 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஹைதராபாத் சென்றார் ரஜினி. 9 நாட்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஷூட்டிங் தொடந்தது. இந்நிலையில் கடந்த 22-ம் தேதி நடிகை கீர்த்தி சுரேஷின் மேக்கப்மேன் மற்றும் ஹேர்டிரெஸ்ஸர் உள்பட நடிகர்களுக்கு நெருக்கமாக இருந்த நான்கு பேருக்கு கொரோனா நோய் பரவியது.
கீர்த்தி சுரேஷ் 'அண்ணாத்த' படத்தில் ரஜினிக்குத் தங்கையாக நடிக்கிறார். படமே அண்ணன் - தங்கை எமோஷனல் கதை என்பதால் இருவருக்குமான நெருக்கமான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில்தான் கீர்த்தி சுரேஷின் உதவியாளருக்கு கொரோனா என்றதும் பதற்றமானார் ரஜினி. கீர்த்தி சுரேஷோடு நெருங்கி நடித்ததால் அங்கிருந்து ரஜினிக்கும் பரவியிருக்கலாம் என்கிற பயம் 'அண்ணாத்த' குழுவினருக்கும் ஏற்பட்டது.
Also Read: ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம்; டிஸ்சார்ஜ் குறித்து மாலையில் முடிவு! ஹைதராபாத் மருத்துவமனை
தனிமைப்படுத்தப்பட்டார் ரஜினி. தனிமைச்சூழல், கொரோனா குறித்த அச்சத்தால் உயர் ரத்தம் அழுத்தம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். இதனால் அவர் கிறிஸ்துமஸ் தினத்தன்று அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக அவருக்குப் பல்வேறு பரிசோதனைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. எதிலும் எந்தப் பிரச்னையும் இல்லை. ரத்த அழுத்தம் மட்டும் சீரானதும் இன்று மாலை ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவார் எனத் தெரிகிறது.
ரஜினி, தொடர்ந்து சிலநாட்கள் ஹைதராபாத்திலேயே தங்கிவிட்டு பின்னர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
source https://cinema.vikatan.com/tamil-cinema/rajinikanth-become-panic-after-keerthy-sureshs-close-aid-tested-corona-positive
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக