சென்னையில் அ.தி.மு.க-வின் முதல் தேர்தல் பொதுக்கூட்டம்!
சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க-வின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். பிரசாரக் கூட்டத்தின் மேடையில் 94 இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், `தி.மு.க தலைவர் ஸ்டாலின் அல்ல; பிரசாந்த் கிஷோர்தான்’ என்றார். முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசுகையில், `அ.தி.மு.க கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்’’ என்று தெரிவித்தார்.
Also Read: `கழற்றிவிடும் கட்சிகள்; தொகுதி மாறும் எடப்பாடி?' - அ.தி.மு.க-வில் அடுத்த அதகளம்!
ரஜினி டிஸ்சார்ஜ் குறித்து பிற்பகலில் முடிவு!
ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நடிகர் ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கவலைப்படும்படி எதுவும் இல்லை. இன்று பிற்பகல் அவரைப் பரிசோதனை செய்த பிறகு டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம்; டிஸ்சார்ஜ் குறித்து மாலையில் முடிவு! ஹைதராபாத் மருத்துவமனை
source https://www.vikatan.com/news/general-news/27-12-2020-just-in-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக