Ad

புதன், 9 டிசம்பர், 2020

புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி! #NowAtVikatan

புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தின் புதிய கட்டத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். மதியம் 12.55 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஒரு மணியளவில் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 2.15 மணியளவில் நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 64,500 சதுர கி.மீ பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்தக் கட்டடத்துக்கான திட்ட மதிப்பீடு ரூ.971 கோடி.

புதிய நாடாளுமன்றக் கட்டடம்

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட இருக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கான பணிகள் 2022 ஆகஸ்டுக்கு முன்பாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், அடிக்கல் நாட்ட மட்டுமே அனுமதி; வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்டுமானப் பணிகள் எதையும் தொடங்கக் கூடாது என்று கண்டிப்புக் காட்டியிருந்தது.

Also Read: புதிய நாடாளுமன்றக் கட்டடம்: `அடிக்கல் நாட்ட அனுமதி; பணிகள் தொடங்கக் கூடாது!’ - உச்ச நீதிமன்றம்

நடிகை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை!

நடிகை சித்ரா

சென்னையை அடுத்த நாசரேத்பேட்டை ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நடிகை சித்ராவின் உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக நண்பர்கள், உறவினர்கள் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

Also Read: சந்தேகம், தொடர் சண்டை, கையைக் கிழித்து மிரட்டல்... சித்ரா மரணத்தில் தொடரும் கேள்விகள்?! #Chithra



source https://www.vikatan.com/news/general-news/10-12-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக