Ad

செவ்வாய், 1 டிசம்பர், 2020

கோத்தகிரி: காட்டுப்பன்றி தாக்கி பெண் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்! - நீலகிரியில் தொடரும் சோகம்

நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோன். 60 வயதான இவர், நேற்று தனது வீட்டின் முன் பகுதியில் வேலை செய்துகொண்டிருந்தார்.

கோத்தகிரி அரசு மருத்துவமனை

அப்போது, திடீரென அங்கு வந்த காட்டுப்பன்றி ஒன்று ஜோனை கடுமையாக தாக்கியது. வலியில் கதறிய இவரது சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஜோனை காப்பாற்ற முயன்றனர்.

ஜோன் வீட்டு அருகில் வசித்து வரும் சுப்பிரமணி என்பவரின் மனைவி சரோஜா கதவை திறந்து வெளியில் வந்துள்ளார். ஜோனை தாக்கிய காட்டுப்பன்றி, திடீரென சரோஜாவையும் தாக்கியது. இதில் சரோஜாவும் படுகாயம் அடைந்தார்.

கோத்தகிரி அரசு மருத்துவமனை

இவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், வரும் வழியிலே சரோஜா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும்,ஜோன் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சோக நிகழ்வு குறித்து கீழ் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த தினேஷ், ``இரண்டு மாதத்தில் இந்த பகுதியில் 4 பேர் காட்டுப்பன்றி தாக்கியதில் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், சரோஜா என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பெரும்பாலும், வீடுகளில் மீதமாகும் உணவுக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யாததால் இவற்றை உண்பதற்காக கரடி, காட்டுப்பன்றி உள்ளிட வன விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருகின்றன.

கோத்தகிரி அரசு மருத்துவமனை

இது போன்ற சமயங்களில் பெரும்பாலும் தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன. உணவுக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தினால் காட்டுப்பன்றிகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க முடியும்" என்றார்.

இது குறித்து வனத்துறையினர், ``காட்டுப்பன்றி தாக்கி உயிரிழந்த சரோஜா குடும்பத்திற்கு முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்கி உள்ளோம். இது குறித்து சோலூர்மட்டம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

kothagiri gh

இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/general-news/wild-boar-attack-in-kothagiri-women-died

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக