Ad

செவ்வாய், 1 டிசம்பர், 2020

``சிங்களருக்கு எதிராக பா.ஜ.க 'வேல் யாத்திரை' போகலாம்’’- மன்சூர் அலிகான் ஐடியா!

`சரியோ... தவறோ...' மனதில் தோன்றுவதை எந்தவித ஒளிவுமறைவுமின்றி 'பளிச்'சென போட்டு உடைத்துவிடும் வித்தியாசமான அரசியல்வாதி, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நடிகர் மன்சூர் அலிகான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, அரசியல் பெருந்தலைகள் போட்டியிட்ட திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கி 55,000 வாக்குகள் பெற்று ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார். 2021 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்த வேளையில், அவரைச் சந்தித்து தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்துப் பேசினேன்...

மன்சூர் அலிகான்

``நிவர் புயல் வெள்ளத்தில், படகில் ஜாலியாக பாட்டுப் பாடியபடி நீங்கள் வெளியிட்டிருக்கும் வீடியோ மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள்?''

``நான் ஒன்றும் ஜாலியாகவெல்லாம் இல்லை. அரசியல்வாதிங்க மக்கள் பிரச்னைகளை கவனிக்க மறந்துட்டாங்க. அதனாலதான், `ஆங்... ரகிட ரகிட ரகிட... மக்களை சந்தோஷமா வாழவெக்கணும். புயலே புயலே தமிழ்நாட்டை விட்டுவிடு... ஆளுகிறவங்க ஏற்கெனவே நாட்டை கார்ப்பரேட்டுக்கு வித்துட்டாங்க' என்றெல்லாம் அந்த வீடியோவில் பாட்டுப் பாடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.’’'

``முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என தலைவர்கள் அனைவரும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு களத்தில் இறங்கி நிவாரணம் வழங்கியிருக்கிறார்களே..?’’

``ம்... யார் போய் மக்களைப் பாத்தாங்க... என்ன நிவாரணம் போய் சேர்ந்துச்சு... செம்பரம்பாக்கம் ஏரி மேல நின்னு டாட்டா காட்டினா போதுமா... எட்டு மாசமா நடக்குற கொரோனா நாடகத்திலிருந்தே இந்த மக்களை இன்னும் இவங்க காப்பாத்தலையே..?

29 வருடங்களைக் கடந்தும் சிறைப்பட்டுக் கிடக்கிற ஏழு பேரை விடுதலை செய்ய இன்னும் என்ன ஆலோசனை செய்ய வேண்டியிருக்கு சொல்லுங்க..?’’

எடப்பாடி பழனிசாமி

``பா.ஜ.க-வினர் தினம் தினம் வேல் யாத்திரை கிளம்பி கைதாகிவருகின்றனரே..?''

``இலங்கையில், முருகன் கோயில்களையெல்லாம் இடித்து தரைமட்டமாக்கி, இரண்டரை லட்சம் தமிழ் மக்களைக் கொன்று குவித்தார்களே சிங்களர்கள்... அங்கே போய், `எங்கள் நாட்டை மீட்க முருகன் துணையோடு வந்திருக்கிறோம்' என்று சொல்லி யாத்திரை போகலாமே...’’

ஒரு தமிழனாக முருகனுக்கு யாத்திரை செல்லும் உண்மையான பக்தர்கள் கால்களில் செருப்பு அணியாமல், அலகு குத்தி மனமுருகி வேண்டிக்கொண்டு செல்வார்கள். அப்படிச் செல்பவர்களை நாமும் பாராட்டுவோம். ஆனால் இவர்களோ அரசியல் செய்கிறார்கள். சென்னையிலிருந்து டெல்லி வரைகூட முருகனை தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பிரபலப்படுத்தட்டும். ஆனால், குறைந்தபட்சம் அலகு குத்திக்கொண்டு செல்லுங்கள். நானும்கூட எலுமிச்சைப்பழம் எடுத்துக்கொண்டு பின்னாடியே வருகிறேன்.’’

வேல் யாத்திரை

``பா.ஜ.க., தி.மு.க என எல்லோரையும் விமர்சிக்கும் உங்களுக்கு என்னதான் கொள்கை?’’

``இனத்தின் எதிரி, இந்தச் சமுதாயத்தின் எதிரி என்று சீமான் சொல்வதுதான் எங்களுக்குக் கொள்கை. தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆள வேண்டும் என்பதே எங்கள் கொள்கை.’’

Also Read: வேல் யாத்திரை : `ஊருக்கு மட்டும்தான் உபதேசமா முதல்வரே?' - கொதிப்பில் தமிழக பா.ஜ.க!

``எடப்பாடி பழனிசாமி என்ற பச்சைத் தமிழர்தானே இப்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்..?’’

``ஐயா, குனிஞ்சி குப்புறப் படுத்துக்கிடப்பவர்களெல்லாம் தமிழர்கள் அல்ல. காலத்தின் சூழ்நிலை. யார், யாரோ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் உச்சிக் குடுமியைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா அம்மாவை என்னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. நான்கு தடவை அப்போலோவுக்குப் போனேன், ஆனால் காபி கொடுத்து கொடுத்து எங்களையெல்லாம் துரத்திவிட்டுவிட்டார்கள்.’’

மன்சூர் அலிகான்

``2021-ல் தமிழக ஆட்சிப் பொறுப்புக்கு யார் வர வேண்டும் என்று உழைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?’’

``தேசியக் கட்சிகள், திராவிடக் கட்சிகளையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு, நாம் தமிழர் கட்சிதான் ஆட்சிப் பொறுப்புக்கு வரும்.’’

Also Read: வலுவடையும் புரெவி புயல்... தென்மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை!

``ஒரே தேசம்; ஒரே தேர்தல் என்கிறாரே பிரதமர் மோடி?''

``இந்தியா எப்போதும் ஒரே நாடாக இருந்தது இல்லை. இது பன்முகத் தன்மைகொண்ட நாடு. நீ நீயாக இரு; நான் நானாக இருக்கிறேன்.’’

நரேந்திர மோடி

``இந்த கொரோனா காலகட்டத்தில், தமிழ்த் திரையுலகம் எப்படியிருக்கிறது?’’

``திரையுலகம் செத்துப்போச்சு. கொரோனா பேரைச் சொல்லி தியேட்டரை மூடவெச்சிட்டீங்க. இப்போ தியேட்டரைத் திறந்த பிறகும் முகமூடி போட்டுக்கிட்டு படம் பார்க்க வரச் சொல்றீங்க. எப்பிடிய்யா அவன் விசிலடிப்பான்?''

இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு இன்றைய ஜூனியர் விகடன் இதழில் ரகளையாக பதில் சொல்லி இருக்கிறார் மன்சூர் அலிகான்

Also Read: தி.மு.க உலகப் பணக்காரர்களைக்கொண்ட கட்சி! - கொரோனா என்று ஒரு நோயே கிடையாது! - என்னை செருப்பால அடிங்க!



source https://www.vikatan.com/news/politics/actor-and-nam-tamilar-party-member-mansoor-alikhan-interview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக