`முதல்வர் வேட்பாளரை கட்சியின் அகில இந்தியத் தலைமைதான் அறிவிக்கும்’ என்று தமிழக பா.ஜ.க தலைவர்கள் சமீபகாலமாக கூறி வருகிறார்கள். இது அ.தி.மு.க கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், அதே கருத்தை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பழங்காநத்தத்தில் மினி கிளினிக் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ``நாளை தொடங்கும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் 2021-ல் வெற்றியைத் தீர்மானிக்கும்.
Also Read: எடப்பாடி பழனிசாமியை கொதிக்கவைத்த சீட் பேரம்..! - முருகன் கொளுத்திய `முதல்வர் வேட்பாளர்' சர்ச்சை
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை வளர்ச்சிபெற்ற மாநிலமாக மாற்றியுள்ளோம். தங்கத்தைத் தோண்டி எடுக்கும் நாடுகளில் கூட தாலிக்கு தங்கம் வழங்கியது கிடையாது. ஆனால், தமிழகத்தில்தான் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. கந்து வட்டி, கட்டப் பாஞ்சாயத்து கொடுமைகள் ஒழிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ற கண்ணோட்டம் தவறானது. 1980-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க 2 இடங்கள் மட்டுமே பிடித்தது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அதேபோல் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும்’’ என்றார்.
Also Read: `கழற்றிவிடும் கட்சிகள்; தொகுதி மாறும் எடப்பாடி?' - அ.தி.மு.க-வில் அடுத்த அதகளம்!
முதல்வர் வேட்பாளர் பற்றி பா.ஜ.க-வினரின் கருத்து பற்றி' செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``பாரதிய ஜனதா கட்சி, அகில இந்தியக் கட்சி என்பதால், அவர்களின் கொள்கைப்படி அகில இந்தியத் தலைவர்தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்.
தேசியக் கட்சி கூட்டணியில் இருப்பதால் முதல்வர் வேட்பாளரை மாநிலக் கட்சி அறிவிக்க கூடாது" என்றார்.
தொடர்ந்து பேசியவர்,``அழகிரி செயல்பாடு மதுரை மக்களுக்கு நன்கு தெரியும். அழகிரி, தன் கொள்கையிலிருந்து மாறாதவர். அண்ணன் அழகிரி முறையாகத் திட்டங்களை வகுத்துச் செயல்படுபவர்.
கலைஞர் கருணாநிதியிடம் உள்ள அனைத்து திறமைகளும் அழகிரியிடம் உள்ளது. ஆனால், தி.மு.க, அழகிரியைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. எதிர்க்கட்சிகளை வளரவிடக் கூடாது என்பதில் கலைஞரைப் போன்று செயல்படுபவர் அழகிரி.
எதிர்க்கட்சியாக இருந்தபோது, நாங்களே பாதிக்கப்பட்டுள்ளோம். அழகிரியிடம் ரௌடிகளாக இருந்தவர்கள் எல்லாரும் தி.மு.க-வுக்குச் சென்றுள்ளார்கள்.
தி.மு.க ஆட்சியின்போது கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றம் என்னை விடுவித்தது.
அழகிரியைப் புறந்தள்ளிவிட்டு தி.மு.க ஆட்சிக்கு வருவது நடக்காத ஒன்று. அழகிரி கட்சி தொடங்கினால் தி.மு.க-வுக்குப் பாதிப்பு ஏற்படும்" என்றார்.
source https://www.vikatan.com/news/politics/minister-sellur-rajus-comment-on-cm-candidate-announcement-irks-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக