தஞ்சாவூரில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், ராஜ்யசபா எம்.பியுமான வைத்திலிங்கம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அவர் கூறுகையில், ``தமிழகத்தில் ஏழை, எளிய பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவியில் உள்ளவர்கள்கூட சத்துணவுத் திட்டத்தால்தான் தங்களால் படித்து பதவிக்கு வர முடிந்தது எனக் கூறியுள்ளனர். தமிழ் மொழிக்கு என்று தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைக் கொண்டு வந்தார்.
அதேபோல் 5-வது உலகத் தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்தியவர். எம்.ஜி.ஆரைக் குறை சொல்வதற்கும், அவரைப் பற்றி பேசுவதற்கும் சீமானுக்கு எந்தத் தகுதியும் இல்லை. உணர்ச்சிவசப்பட்டு சவுண்டாகப் பேசுவதால் சீமான், தன்னை பெரிய தலைவராக நினைத்துக்கொள்ள வேண்டாம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணியே இதுவரை உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியினர் மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக கிராம சபைக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். மக்களுக்கு இந்த ஆட்சி என்ன செய்திருக்கிறது என்பது பற்றி எல்லோருக்கும் தெரியும்.
Also Read: மகனுக்காகக் குறிவைக்கும் வெல்லமண்டி; எச்சரித்த வைத்திலிங்கம்!-என்ன நடக்கிறது திருச்சி அதிமுக-வில்?
அம்மா மினி கிளினிக், பொங்கல் பரிசு, குடிமராமத்து திட்டம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு போன்றவை மக்களிடம் அமோக வரவேற்பு பெற்று இருக்கும்போது எதிர்க்கட்சியினர் சின்ன சின்ன விஷயத்தை பெரிதாக்குவார்கள் அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை’’ என்றார்.
source https://www.vikatan.com/news/politics/admk-mp-vaithilingam-slams-seeman
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக