மனு அளிக்க வந்த மூதாட்டியை தன் காரில் ஏற்றி, அவர் வீட்டுக்கே சென்று பிரச்னையை கேட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மதுரை கலெக்டர் அன்பழகனின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த 80 வயதான பாத்திமா சுல்தான் உடல்நலம் இல்லாத நிலையிலும், மனு கொடுப்பதற்காக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்தார்.
அலுவலகத்திற்கு வந்த கலெக்டர் அன்பழகன் மனுவுடன் நிற்கும் மூதாட்டியை பார்த்து காரை விட்டு இறங்கி அந்த மூதாட்டியிடம் பேசினார். பின்பு அவர் உடல் நலம் பற்றி விசாரித்து தேநீர் கொடுக்க உத்தரவிட்டார்.
என்ன பிரச்னை என்று அவரிடம் விசாரித்தார். `தான் குடியிருந்த வீட்டின் உரிமையாளர், வீட்டை காலி செய்ய வைத்துவிட்டு கொடுத்த பணத்தை தராமல் ஏமாற்றுவதாக' தெரிவித்தார்.
இதையடுத்து தனது காரில் மூதாட்டியை ஏற்றி அவர் வசிக்கும் வீட்டிற்கு சென்றார். அவருக்கு ஆறுதல் கூறி, அவரிடம் தண்ணீர் வாங்கி குடித்த பின்பு மூதாட்டிக்கு செலவுக்கு பணம் கொடுத்தார்.
அவர் கொடுத்த புகாரை உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவம் மூதாட்டியையும் அப்பகுதி மக்களையும் நெகிழ வைத்துள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/madurai-collector-action-on-elder-women-petition
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக