Ad

திங்கள், 14 டிசம்பர், 2020

தேனி: `பெண்களுக்கு முன்னுரிமை; சொல்லும் தந்தை எம்.எல்.ஏ., மகனோ எம்.பி’ - ஓ.பி.எஸ்ஸை சீண்டிய கமல்

தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டுவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், தேர்தல் வியூகம் - 2021 என பெயரிடப்பட்ட தேர்தல் சுற்றுப்பயணத்திற்காக நேற்று மதியம் தேனி வந்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்தார். அதன் ஒரு பகுதியாக, பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

கமல்

Also Read: ரஜினி - கமல் கூட்டணி வைத்தால் என்ன நடக்கும்? #VikatanPollResults

அவர் பேசுகையில், “இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என கூறிய ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் தான். தமிழகத்தில் 3.1 கோடி ஆண் வாக்காளர்களும், 3.9 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றம் கொண்டு வரலாம். பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறும் தந்தை எம்.எல்.ஏ. மகனோ எம்.பி.! தமிழகத்தில் இரண்டரை அண்டுகள் ஆணும், இரண்டரை ஆண்டுகள் பெண்ணும் ஆளலாம் என கூறுகிறார். அவர் யார் ரிலீசை மனதில் வைத்து கூறினாரோ.! மக்கள் நீதி மய்யம் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் கட்சி. எங்கள் ஆட்சி மலரும் போது 20 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள். அரசியல் ஒரு சாக்கடை எனக் கூறி பெண்களை வீட்டிலேயே நாம் முடக்கி வைத்து விடுகிறோம். ஆனால் மக்கள் நீதி மய்யக் கூட்டத்திற்கு வரும் பெண்கள் கைக்குழந்தையுடன் வருகின்றனர். குழந்தையுடன் கட்சி கூட்டத்திற்கு பெண்கள் வரும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் தான்.

இளைஞர்களுக்கு அட்வைஸ் செய்த கமல்

உங்களைக் கண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இது காசு கொடுத்து வந்த கூட்டம் அல்ல. தானாக வந்த கூட்டம். நாங்கள் காசு கொடுக்க மாட்டோம், மக்களிடம் காசு எடுக்கவும் மாட்டோம்” என்றார். கமல், தேனிக்கு வந்த முதல் அரசியல் பயணத்திலேயே ஓ.பி.எஸை விமர்சித்துப் பேசியது, தேனி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தியது.

Also Read: மதுரையில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய கமல்! #TNElections2021

காரில் தேனி வந்த கமல், ஆண்டிபட்டி அருகே வரும் போது, மூன்று இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில், கமலின் காரை பின் தொடர்ந்து வந்தனர். அதனைக் கவனித்த கமல், கார் கதவின் கண்ணாடியை இறக்கிவிட்டு, மூவருக்கும் கை அசைத்துவிட்டு, கவனமாக வாகனத்தை ஓட்டும் படி அறிவுரை கூறினார். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

கமல்

Also Read: `பொங்கிவரும் புதுவெள்ளத்துக்கு சிறுமடைகள் தடைகள் ஆகாது!’ - மதுரையில் கமல்

தேனி பயணத்தை முடித்துக்கொண்டு, வத்தலக்குண்டு வழியாக திண்டுக்கல் சென்றார் கமல். அங்கே, அவர் பேசுகையில், “நமக்கு டார்ச் லைட் சின்னம், தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்டிருக்கிறது. நாம் பல மாற்றங்களை செய்யக் காத்திருக்கிறோம். டார்ச் லைட் இல்லையென்றால் என்ன கலங்கரை விளக்கம் கேட்போம். வெற்றிக்கான பாதை கண்முன்னே தெரிகிறது” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/kamal-while-speaking-at-a-party-function-indirectly-attacked-ops

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக