சசிகலாவின் தண்டனைக் காலம் வரும் ஜனவரி 27-ம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது. அதற்கு முன்கூட்டியே விடுதலை செய்ய சசிகலா விண்ணப்பித்து உள்ளார். அதையடுத்து விரைவில் அவர் விடுதலை அவரின் ஆதரவாளர்கள் பலரும் எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். உண்மையில் தண்டனைக் காலத்திற்கு முன்பே சசிகலா விடுதலை ஆவாரா...? என பெங்களூரு சிறைத்துறை ஆணையர் பதிலளித்துள்ளார்.
கடந்த 1991 முதல் 96 வரை ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்ந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும் மற்ற மூவருக்கும் தலா 10 கோடி அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதையடுத்து ஜெயலலிதா மரணமடைந்த நிலையில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 15.2.2017 தேதியிலிருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்களுடைய தண்டனைக் காலம் வரும் ஜனவரி 27-ம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இந்நிலையில் சசிகலா தண்டனைக் காலத்திற்கு முன்பே விடுதலை செய்யுமாறு பெங்களூரு சிறைத்துறைக்கு விண்ணப்பித்து இருக்கிறார். இதனால் அவருடைய ஆதரவாளர்கள் சசிகலா விரைவில் வெளியே வந்து விடுவார் என காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சசிகலா தண்டனைக் காலத்திற்கு முன்பே விடுதலை ஆவாரா? என கேள்வி கேட்டிருந்தார். அவருக்கு பெங்களூரு சிறைத்துறை ஆணையர் பதில் அளித்துள்ளார்.
இதுபற்றி பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தியிடம் கேட்டதற்கு, ''சசிகலாவின் ஆதரவாளர்கள் கூறுவதைப் போல சசிகலா தண்டனைக் காலத்திற்கு முன்பே விடுதலை செய்யப்படுவாரா? என்பதை தெரிந்து கொள்வதற்காக பெங்களூரு சிறைத்துறை ஆணையருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, `சசிகலாவிற்கு தண்டனைக் குறைக்கப்படுமா?’ என்று கேட்டிருந்தேன்.
அதற்கு பெங்களூரு சிறைத்துறை ஆணையர் அளித்துள்ள பதிலில், `சிறைத்துறை வழிகாட்டுதல் விதிமுறைப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளுக்கும், 65 வயதிற்கு மேற்பட்ட ஆண் சிறைவாசிகளுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட பெண் சிறைவாசிகளுக்கும், 14 ஆண்டுகள் சிறையில் உள்ள ஆண் சிறைவாசிகளுக்கும், 12 ஆண்டுகள் சிறையில் உள்ள பெண் சிறைவாசிகளுக்கு மட்டுமே தண்டனை குறைப்பு பொருந்தும். மற்றவர்களுக்கு பொருந்தாது’ கூறப்பட்டுள்ளது” என்றார்.
இதை வைத்துப் பார்க்கும் போது சசிகலா தண்டனைக் காலத்திற்கு முன்பு விடுதலை ஆக வாய்ப்பு இல்லை என்பதை அறிய முடிகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/will-sasikala-be-released-before-her-release-date-according-to-the-judgement
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக