Ad

வெள்ளி, 4 டிசம்பர், 2020

ஊட்டி: `புதிய கட்சிகளின் வரவு எங்கள் வெற்றியை பாதிக்காது!’ - கனிமொழி

'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில், நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க மகளிரணி செயலாளருமான கனிமொழி, தமிழகம் முழுவதும் பிரசார பயணயனத்தை மேற்கொண்டு வருகிறார்.

கனிமொழி

நீலகிரி மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்திருந்த கனிமொழி, எல்லநள்ளி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தோட்டத்திற்குள் இறங்கிய அவர், தொழிலாளர்களுடன் தேயிலையை பறித்தார்.

மேலும், அதே பகுதியில் உள்ள காளான் வளர்ப்பு பண்ணைக்கு சென்ற கனிமொழி, காளான் தொழிலில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். ஊட்டியில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கனிமொழி

ஊட்டியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பழங்குடி மக்களை சந்தித்து கலந்துரையாட சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். தங்களின் பாரம்பரிய ஆடல் பாடல்களுடன் கனிமொழியை வரவேற்ற பழங்குடிகள், தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நிகழ்வுக்குப்பின் பழங்குடிகளுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்.

ஊட்டி ஆனந்தகிரி அரங்கில் மாலை நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில், படுகர் இன மக்களின் பாரம்பரிய உடையில் தோன்றிய கனிமொழி, தொண்டர்களின் குறைகளை கேட்டறிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ``செல்லுகின்ற இடமெல்லாம் தி.மு.கவுக்கு மக்களின் ஆதரவு அமோகமாக உள்ளது.

கனிமொழி

வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க வின் வெற்றி உறுதியாகியுள்ளது. புதிய கட்சிகள் எங்களது வெற்றியை எந்த வைகையிலும் பாதிக்காது. 5 மாதம் பொறுத்துக் கொள்ளுங்கள்" என முடித்தார்.



source https://www.vikatan.com/news/general-news/dmk-mp-kanimozi-ooty-visit-update

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக