Ad

வியாழன், 24 டிசம்பர், 2020

சென்னை: `வெளிநாட்டு வேலை; கைநிறைய சம்பளம்' - ஆசைவார்த்தையால் பணத்தை இழந்த பட்டதாரி

சென்னை தரமணி, பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளி (55). இவரின் மகன் முருகேசன். பட்டதாரியான இவர், வேலை தேடிவந்தார். இந்தச் சமயத்தில் மலேசியாவில் வேலை என்ற விளம்பரத்தைப் பார்த்து, அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் நம்பருக்குத் தொடர்புகொண்டார். அப்போது எதிர்முனையில் பேசியவர், முருகேசனின் கல்விச் சான்றிததழ்கள், பாஸ்போர்ட் ஆகியவற்றைச் சரிபார்த்து உறுதி செய்ய முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மணிமாறன், சிவானந்தம்

அதை உண்மையென நம்பிய முருகேசனும், அவரின் அம்மாவும் இரண்டு தவணைகளாக போனில் பேசியவர் கூறிய வங்கிக் கணக்குக்கு 47,000 ரூபாய் செலுத்தியிருக்கின்றனர். அதன் பிறகு வேலை தொடர்பாக எந்தவிதத் தகவலும் தெரியவில்லை. அதனால் வள்ளியும் முருகேசனும் வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறியவரின் செல்போன் நம்பருக்குத் தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஆனால், எந்தவித பதிலும் இல்லை. அதன் பிறகே வள்ளியும் முருகேசனும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கின்றனர்.

இதையடுத்து அடையாறு துணை கமிஷனர் விக்ரமனைச் சந்தித்து வள்ளி, பணத்தை ஏமாந்தது தொடர்பாக புகாரளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்த துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சைபர் க்ரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயபாலாஜி, மகாராஜன், முதல்நிலைக் காவலர்கள் சதீஸ், இந்திராணி ஆகியோர் விசாரணை நடத்தினர். செல்போன் நம்பர்கள், வங்கி விவரங்கள் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது கடலூர் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் அவரின் கூட்டாளி சிவா என்கிற சிவானந்தம் இருவரும் இணைந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

Also Read: நட்பு வினையாது! நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் அபேஸ் செய்தவர் கைது!

பறிமுதல் செய்யப்பட்ட கார்

இந்தத் தகவல் துணை கமிஷனரின் தனிப்படையிலிருக்கும் தலைமைக் காவலர்கள் சதீஸ்குமார், கிரி, ஜானி விஜி, சண்முகானந்தம், முதல்நிலைக் காவலர் லோகநாதன் ஆகியோர் மோசடியில் ஈடுபட்ட மணிமாறன், சிவானந்தம் இருவரையும் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து அடையாறு சைபர் க்ரைம் போலீஸார் மற்றும் தனிப்படை போலீஸார் கூறுகையில், ``கடந்த 2012-ம் ஆண்டு முதல் மணிமாறனும் சிவானந்தமும் டிராவல்ஸ் ஏஜென்ஸி நடத்தி வந்திருக்கின்றனர். அப்போது, வெளிநாடுகளுக்குச் சிலரை வேலைக்கு அனுப்பியிருக்கின்றனர். பின்னர் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்புபவர்களிடம், கைநிறைய சம்பளம் என ஆசைவார்த்தைக் கூறி பணத்தை ஏமாற்றிவந்திருக்கின்றனர். அதனால் மணிமாறன், சிவானந்தம் ஆகியோரைப் பிடித்து தரமணி காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறோம். அவர்களிடமிருந்து கம்ப்யூட்டர்கள், பாஸ்போர்ட்கள், கார் மற்றும் சில ஆவணங்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-2-youths-in-job-fraud-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக