Ad

புதன், 2 டிசம்பர், 2020

புரெவி: `டிசம்பர் 3, 4 தேதிகளில் வெளியே செல்வதை தவிருங்கள்!’ - இராமநாதபுரம் ஆட்சியர் கோரிக்கை #Burevi #LiveUpdates

வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்!

'புரெவி' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கோரிக்கை!

காற்றுடன் மழை!

பலத்த காற்றுடன் பெய்த மழையில் மண்டபம் போலீஸ் குடியிருப்பில் மரம் சாய்ந்து விழுந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாம்பனுக்கு அருகில் `புரெவி’!

இலங்கையின் திரிகோணமலையில் நேற்று கரையை கடந்த புரெவி புயல் தற்போது வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது பாம்பன், குமரி இடையே இன்று இரவு அல்லது நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/cyclone-burevi-news-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக