Ad

செவ்வாய், 15 டிசம்பர், 2020

`ரூ.15 கோடி ரொக்கம்; 100 கோடி மதிப்பிலான ஆவணங்கள்?!’ - ஈரோடு ரெய்டின் பின்னணி

ஈரோட்டில் `ஸ்ரீ பதி அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ எனும் பிரபலமான கட்டுமான நிறுவனம் உள்ளது. சீனிவாசன், சேகர், பூபதி ஆகிய 3 பேர் இந்நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர். இந்த நிறுவனமானது தமிழக அரசின் பல கட்டுமானப் பணிகளை கான்ட்ராக்ட் எடுத்து, செய்து வருகிறது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணியைச் செய்து வருவதோடு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக டெண்டரையும் எடுத்திருக்கிறார்கள். கட்டுமானப் பணிகள் மட்டுமல்லாமல் ஸ்ரீபதி என்னும் பெயரில் பேருந்துகள், ரியல் எஸ்டேட் தொழில், கல் குவாரி, கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு, திருமண மண்டபம் மற்றும் மசாலாப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களையும் செய்து வருகின்றனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள்

இந்த நிறுவனமானது அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில் ஈரோடு, கோவை மற்றும் மதுரையிலிருந்து வந்த 25-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை (டிசம்பர் 14) இந்நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்டனர். ஈரோடு தங்கபெருமாள் கோயில் வீதியில் உள்ள`ஸ்ரீ பதி அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நிறுவனத்துக்குச் சொந்தமான மற்ற அலுவலகங்கள், தொழிற்சாலைகள், இயக்குநர்களின் வீடுகள், திருமண மண்டபம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையைத் தொடங்கினர்.

நேற்று முந்தினம் காலை ஆரம்பித்த சோதனை, இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது இன்றும் வரை நடக்கும் என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மற்றபடி, இந்த ரெய்டில் கைப்பற்றப்பட்டுள்ளவை குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை.

ஆனால் விஷயமறிந்த அதிகாரிகளோ, `கணக்கில் வராத 16 கோடி ரூபாய் ரொக்கமும், கிட்டத்தட்ட 100 கோடி மதிப்பிலான ஆவணங்கள், 5 ஹார்ட் டிஸ்குகள் போன்றவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது. அதிலிருந்து லீட் எடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அரசியல் பிரமுகர்களின் ஆசி இருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது’ என்றனர்.

ரெய்டு நடந்த அலுவலகம்

இதுகுறித்து மேலும் சிலரிடம் விசாரித்தோம். ``2014-க்குப் பிறகுதான் இந்த நிறுவனம் அசுர வளர்ச்சியடைந்தது. கர்நாடகாவிலும் இந்நிறுவனம் டெண்டர் எடுத்து பல அரசு கட்டுமானங்களைச் செய்து வருகிறது. தமிழகத்தில் பல அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானங்களை இவர்கள் செய்து வருகின்றனர். இந்த ரெய்டு பின்னணியில் சில அரசியல் விவகாரங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது போக போக தான் தெரியும்’’ என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/news/background-story-of-erode-income-tax-raid-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக