Ad

செவ்வாய், 15 டிசம்பர், 2020

வாடகை பாக்கி: `நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டும்!’ -லதா ரஜினிகாந்த்-க்கு நீதிமன்றம் எச்சரிக்கை #NowAtVikatan

லதா ரஜினிகாந்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை உயர் நீதிமன்றம்

லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி, வாடகை பாக்கி வைத்திருப்பதாக பள்ளி வளாக நில உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். பள்ளிக்கான வாடகை தொகையை சரிவர தராமல் ரூ.11 கோடி வரை நிலுவையில் உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையில், பள்ளி வளாகத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதிக்குள் காலி செய்ய உயர்நீதிமன்றம் கெடு விதித்திருக்கிறது. உத்தரவின்படி காலி செய்ய தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் இதே பள்ளி முகவரியில் அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது என்றும் ஆஸ்ரம் பள்ளிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வளாகத்தை காலி செய்ய முடியவில்லை என லதா ரஜினிகாந்த் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டது.

திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி!

எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவில் தற்போது பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அரங்குகளில் 50% பங்கேற்பாளர்களுடன் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, வரும் 19-ம் தேதி முதல் திறந்தவெளியிலும் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் 50% பங்கேற்பாளர்களுக்கு மிகாமல் கூட்டம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

`அரையாண்டுத் தேர்வு ரத்து!’ - செங்கோட்டையன்

பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டது. தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஆன்லைன் மூலமும் கல்வி தொலைக்காட்சி மூலமும் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்தாண்டு அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். மேலும் தனியார் பள்ளிகள் விரும்பினால், அரையாண்டு தேர்வை, ஆன்லைனில் நடத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது!



source https://www.vikatan.com/news/general-news/16-12-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக