செம்பரம்பாக்கம் ஏரி: மீண்டும் நீர் திறக்கப்படுகிறது!
புரேவி புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. புரெவி புயலின் வெளிப்புற சுற்று மேகங்கள் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை அடைந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார புறநகர் பகுதிகள் பரவலாக இன்று முழுவதும் விட்டு விட்டு மழை பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வரும் சூழலில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 12 மணியளவில் ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்படுவதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/03-12-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக