Ad

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

வேதாரண்யம்: 1 ரூபாய் கட்டணத்தில் 7 ஆண்டுகள் கல்வி - இளைஞரின் அசத்தல் முயற்சி!

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா பிரிஞ்சிமூலை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் தனது சொந்த ஊர் மக்களுக்குச் சேவையாக கட்டணமில்லா குழந்தைப் பராமரிப்பு மையத்தை துவங்கி சுமார் 7 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். தற்போது அதன் தொடர்ச்சியாக, 1 முதல் 5 வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளியைத் தொடங்கியுள்ளார்.

கல்வி

இப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது ஆங்கில வழிக் கல்வி கற்க அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில், ஏழை விவசாய மக்கள் வசிக்கும் இப்பகுதியில் இப்பள்ளி மூலமாக 7 ஆண்டுகள் முழுவதும் இலவசமாக கல்வி வழங்க ரமேஷ்குமார் முடிவு செய்தார்.

இதற்காக பெற்றோரிடமிருந்து ரூ.1 மட்டுமே கட்டணமாக பெற்றுக்கொண்டுள்ளார். பள்ளியைத் தொடர்ந்து நடத்த 1 கோடி பேரிடமிருந்து தலா ரூ.1 வீதம் வசூல் செய்து பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டுவது, ஆசிரியர்களுக்கு உரிய சம்பளம் வழங்குவது, கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவது என முடிவு செய்து தற்போது இந்தப் பள்ளியைத் துவக்கியுள்ளார்.

கல்வி

தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்.கே.ஜி. வகுப்புக்கே லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கும் இந்தக் காலகட்டத்தில், ரூ.1-க்கு கல்விச் சேவையாற்றும் ரமேஷ்குமாரின் முயற்சியைப் பல்வேறு தரப்பினரும் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/education/vedaranyam-7-years-of-education-at-a-fee-of-1-rupee-youths-stunning-effort

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக